கோடைக்காலத்தில் இந்த உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்!!!

கோடைக்காலத்தில் நாம் என்னதான் வெயிலில் செல்லாமல் வீட்டில் இருந்தாலும் உடல் வெப்பம் அடைவதை நம்மால் தடுக்க முடியாது. கோடைக்காலம் ஆரம்பித்தாலே அனைவருக்கும் மனதில் ஒரு விதமான பயம் ஏற்படுகிறது. ஏனெனில் மற்ற காலங்களைத் தவிர, கோடைக்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தாங்கிக் கொள்ள முடிவதில்லை. பொதுவாக தட்பவெட்ப நிலை மாறிய உடனே நம் உணவு பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வது அவசியம். நமது உடலில் சாதாரன நேரத்தில் இருக்கும் வெப்பத்தை விட கோடைக்காலத்தில் உடலின் வெப்பமானது அதிகமாகவே இருக்கும்.

எனவே நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கோடைக்காலத்தில் எந்தெந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது என்று இப்போது பார்க்கலாம். இந்த உணவுகளை முடிந்தவரை கோடைக்காலத்தில் தவிர்ப்பது நல்லது.

இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇

https://t.me/health_tips_tamil

கார உணவுகள்

கார உணவுகளை கோடையில் மட்டும் அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் கார உணவுகளை சாப்பிட்டால், உடல் வெப்பமானது அதிகரிக்கும். அதிலும் பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம், பட்டை போன்ற உணவிற்கு காரத்தைத் தரும் மசாலாப் பொருட்களை சற்று தள்ளி வைப்பது நல்லது.

சப்பாத்தி

கோதுமை மாவினால் செய்யப்படும் சப்பாத்தி செரிமானம் ஆவதற்கு நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும். இதனால் இந்த நேரத்தில் உடல் வெப்பமானது அதிகரிக்கும். எனவே பகல் நேரத்தில் சப்பாத்தி சாப்பிடுவதற்கு பதிலாக சாதத்தை எடுத்துக் கொள்வது நல்லது.

பால் பொருட்கள்

அன்றாடம் சாப்பிடும் பால் பொருட்களான பால், சீஸ், தயிர் போன்றவையும் உடல் வெப்பத்தை அதிரிக்கும். எனவே இதனை கோடையில் அளவாக சாப்பிடுவது நல்லது

சிக்கன், நண்டு, இறால்

அசைவ உணவுப் பிரியர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அத்தகையவர்கள் கோடையில் சிக்கன், நண்டு, இறால் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை சிலசமயங்களில் சூட்டை கிளப்பி வயிற்றுப் பிரச்சனையான வயிற்றுப் போக்கை உண்டாக்கி, உடலில் இருந்து நீரை வெளியேற்றிவிடும். எனவே இதனை தவிர்ப்பதே நலம்.

ஜங்க் உணவுகள்

பர்கர், பிட்சா, பிரெஞ்ச் ப்ரைஸ் போன்றவை செரிமான மண்டலத்திற்கு கஷ்டத்தைக் கொடுப்பதோடு, சில நேரங்களில் அவை ஃபுட் பாய்ஸனையும் ஏற்படுத்தும். மேலும் இத்தகைய உணவுகள் உடலுக்கு தீமையையே கொடுக்கக்கூடியது. இத்தகைய உணவுகளை அனைத்து காலங்களிலும் தவிர்ப்பதே உடலுக்கு சிறந்தது.

காபி

காபியும் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று. எனவே இதனை முடிந்த வரையில் அதிகம் சாப்பிடுவதை தவிர்ப்பதே சிறந்தது.

வறுத்த உணவுகள்

எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளை அதிகம் சாப்பிட்டாலும், உடல் வெப்பம் அதிகரிப்பதோடு, வாயுத் தொல்லையும் உண்டாகும்.

உலர் பழங்கள்

உலர் பழங்கள் மிகவும் ஆரோக்கியமானவை தான். அதே சமயம் அதில் உடலை வெப்பப்படுத்தும் தன்மையும் அதிகம் உள்ளது. எனவே இதனை கோடையில் அளவாக சாப்பிட வேண்டும்.

மாம்பழம்

கோடையில் அதிகம் கிடைக்கும் மாம்பழம் சாப்பிட்டால், உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் அவை உடல் வெப்பத்தை அதிகரிக்கும். இதுவும் அளவுக்கு அதிகமானால், அவை உடல் வெப்பத்தை கிளப்பிவிட்டு, பருக்களையும் உண்டாக்கும். எனவே இந்த பழத்தை அளவாக சாப்பிடுவது நல்லது. குறிப்பாக, உடல் வெப்பம் அதிகம் உள்ளவர்கள், இதனை தவிர்ப்பதே நல்லது.

ஐஸ் க்ரீம் மற்றும் குளிர் பானங்கள்

குளிர்ச்சியாக இருக்கும் ஐஸ் க்ரீம் மற்றும் குளிர் பானங்கள் இரண்டுமே உடல் வெப்பத்தை அதிகரிக்கக்கூடியது. இவற்றை சாப்பிட்டால், வாய்க்கு மட்டுமே குளிர்ச்சியாக இருக்குமே தவிர, வயிற்றிற்கு அவை சென்றால், வெப்பத்தை தான் அதிகரிக்கும்.

இனிப்பு பண்டங்கள்

சர்க்கரை மற்றும் இனிப்பு பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

பாஸ்ட் புட்

கடைகளில் விற்கப்படும் பாஸ்ட் புட் உணவு வகைகளை சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *