கிர்ணி பழத்திற்கு இன்னொரு பெயர் உண்டு பெரும்பாலானோர் கிர்ணி பழத்தை முலாம் பழம் என்றும் அழைப்பர். கோடைக்காலத்தில் மிக அதிகமாக கிடைக்கும். இந்த பழத்தில் தண்ணீர் அளவு அதிகமாக உள்ளது. அது மட்டுமின்றி அதிகப்படியான வைட்டமின் சத்துக்கள் உள்ளது. கிர்ணி பழத்தை எல்லாராலும் வாங்க முடியும்.

கிர்ணி பழத்தை எப்படி வாங்குவது
கிர்ணி பழத்தின் காம்பின் முனையில் நுகர்ந்து பார்த்தால் மஸ்க் வாசனை வந்தால் அது நன்றாக பழுத்த கிர்ணி பழம். அதுவே மஸ்க் வாசனை வராமல் இருந்தால், அது பழுக்காத கிர்ணி பழம்.
இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇
https://t.me/health_tips_tamil
கிர்ணி பழத்தில் இருக்கும் நன்மைகள்
கிர்ணி பழத்தில் உள்ள ஆரஞ்சு நிற சதைப்பகுதி ஊட்டச்சத்து நிறைந்தது. இந்த பழம் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
கர்பினி பெண்கள் இதை எடுத்துக்கொண்டால் குழந்தையின் முதுகெலும்பு, மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும். குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
கிர்ணி பழமாகவோ அல்லது ஜுஸ் செய்து அருந்தும் போதும் ரத்தத்தில் நீர் சத்து சேர்ந்து, ரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.
கிர்ணி பழத்தில் நார்ச்சத்து மற்றும் அடினோசைன் எனப்படும் வேதிப்பொருள் உள்ளதால், ரத்த செல்கள் உறைவதை தடுத்து இதயம் சம்மந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.
தினசரி உணவில் கிர்ணி பழம் சேர்த்துக்கொள்வதால், வயிற்று கோளாறுகள் குறைகிறது.
இந்த பழத்தை சாப்பிடுவதால் பார்வைத்திறன் அதிகரிக்கிறது. அழகான சருமமும் கிடைக்கிறது.
கிர்ணி பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளும் போது மலச்சிக்கல் பிரச்சனை வராது.
பித்தத்தை முற்றிலும் அகற்றும். சரும நோய்க்கு எளிய மருந்து.
பொட்டாசியம் உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. எனவே இந்த பழத்தை உணவுகளில் சேர்த்துக்கொள்ளும் போது உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
குறிப்பு
கிர்ணி பழத்தை வெட்டிய உடனே சாப்பிட வேண்டும். இல்லையென்றால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் ஆக்சிஜனிறக்கம் அடைந்து அதில் உள்ள பலன்கள் கிடைக்காமல் போய்விடும்.