நமது உடலில் பல மாற்றங்கள், நன்மைகள் தரும் கொத்தமல்லி இலையும் அதன் மருத்துவ குணங்களும்!!!

நமது உடலில் பல மாற்றங்கள், நன்மைகள் தரும் கொத்தமல்லி இலையும் அதன் மருத்துவ குணங்களும்!!!

வணக்கம் நண்பர்களே!!! நாம் தினமும் பயன்படுத்த கூடிய கொத்தமல்லி இலையில் பல நன்மைகள் உள்ளது. கொத்தமல்லி இலை உணவு சுவையாக, வாசனையாக இருக்க பயன்படுத்துகிறோம். ஆனால் கொத்தமல்லி இலையில் பல நன்மைகள் இருக்கிறது. கொத்தமல்லி இலையும், அதன் நன்மைகள் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

👉 கொத்தமல்லி இலைகள் கண்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. குறைவான கண் பார்வை உள்ளவர்கள் அடிக்கடி கொத்தமல்லி இலையை உணவில் சேர்த்து கொண்டால் ஆரோக்கியமான கண் பார்வை ஏற்படுகிறது.

👉 தண்ணீரில் ஒரு கப் கொத்தமல்லி இலை, ஒரு கப் சர்க்கரை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து ஆறிய பிறகு கர்ப்பினி பெண்கள் குடித்து வந்தால் மயக்கம், வாந்தி வராது.

👉 கொத்தமல்லி இலை கறிவேப்பிலை, புதினா, இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், தேங்காய் சேர்த்து வதக்கி துவையல் செய்து உண்டு வந்தால் உடல் சூடு, பித்த சூடு குறையும்.

👉 கொத்தமல்லி சட்னி, கொத்தமல்லி சாதம் கொத்தமல்லி இலை அதிகமாக பயன்படுத்தி உணவு உட்கொள்வதன் மூலம் நன்கு பசியை தூண்டுகிறது.

👉 வயிறு மற்றும் குடல் உறுப்புகள் நன்றாக இயங்க சாப்பிடும் உணவை ஜீரணமாக கொத்தமல்லி உதவுகிறது.

👉 கொத்தமல்லி இலையை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்பை குணப்படுத்துகிறது.

👉 கொத்தமல்லி இலை அரைத்து, அதனுடன் தேன் கலந்து சருமம் தொடர்பான நோய் ஏற்பட்ட இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவினால் தோல் வியாதிகள் விரைவில் குணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *