அடிக்கடி இந்த உணவுகளை சாப்பிடுகிறீர்களா? அப்படி என்றால் கிட்னியில் கல் உருவாகும் ! தாங்க முடியாத வலி ஏற்படும்!

அடிக்கடி இந்த உணவுகளை சாப்பிடுகிறீர்களா? அப்படி என்றால் கிட்னியில் கல் உருவாகும் ! தாங்க முடியாத வலி ஏற்படும்!

சிறுநீரகங்கள் மனித உடலில் மிக முக்கியமான ஒன்றாகும். சிறுநீரகத்தின் முக்கிய வேலை இரத்தத்தில் இருந்து அசுத்தங்களை வெளியேற்றுவதே. நோய் இல்லாத வாழ்க்கைக்கு ஆரோக்கியமாக செயல்படுவதில் சிறுநீரகமும் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்போது நாம் கிட்னியில் கல் வராமல் தடுப்பதற்கு சில உணவுகளை பற்றி பார்க்கலாம்.

இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇

https://t.me/health_tips_tamil

இனிப்பு, காரம்

அதிக இனிப்பு, புளிப்பு, காரம், மசாலா நிறைந்த உணவுகள், குளிர்பானங்கள், செயற்கை சுவையூட்டிகள் அனைத்துமே உடலுக்கு கேடு தரக்கூடியவை. இதனால் உடல் பருமனும், சிறுநீரகப்பையில் கற்களும் இது போன்ற பிரச்சனை ஏற்படுகிறது.

கீரை

கீரையில் அதிக அளவு நன்மை இருக்கிறது. கீரையில் ஆக்ஸாலிக் அமிலம் இருக்கிறது. இந்த அமிலம் கிட்னியில் கற்களை ஏற்படுத்தும். அதனால் கீரையை குறைந்த அளவு சாப்பிடலாம்.

நட்ஸ்

கடலைப்பருப்பு, பாதாம், முந்தரி, அத்திப்பழம் போன்ற நட்ஸ்களில் ஆக்சலேட் அமிலம் இருப்பதால் நட்ஸ் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளாமல் தவிர்க்கலாம்.

சோடியம் அதிகம் உள்ள உணவுகள்

பதப்படுத்தப்பட்ட மற்றும் கேன்களில் அடைக்கப்பட்ட உணவுகளை அதிகம் உட்கொள்வதை தடுக்க வேண்டும். இந்த உணவுகளில், உணவு கெடாமல் இருக்க அதிக உப்பு சேர்க்கப்படுகிறது. இதனால் உடலுக்கு தீங்கு ஏற்படுகிறது. நாம் உண்ணும் உணவிலும் குறைந்த அளவு உப்பு சேர்த்துக் கொள்வது நல்லது.

பிரவுன் அரிசி

பிரவுன் அரிசியில் பாஸ்பரஸ், சோடியம் நிறைந்துள்ளது, இது சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே அதிகப்படியாக பிரவுன் அரிசியை எடுத்துக் கொள்வதை தவிர்க்கலாம்.

வயிற்றில் வளரும் குழந்தை ஆனா ? பெண்ணா? என்பதை கண்டறிய சில வழிகள்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *