10 நிமிடத்தில் அட்டகாசமான‌ சுவையில் செய்ய ருசியான மோர் குழம்பு…

10 நிமிடத்தில் அட்டகாசமான‌ சுவையில் செய்ய ருசியான மோர் குழம்பு…

இன்றைய பதிவில் நாம் மிகவும் சுவையான மோர் குழம்பு 10 நிமிடத்தில் எவ்வாறு செய்யலாம் என்று பார்க்கலாம். முக்கியமாக கோடைக்காலத்தில் அருமையான குழம்பாக இருக்கிறது. இப்போ இந்த மோர் குழம்பு எவ்வாறு செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தயிர் ( புளித்தது ) – 1 கப்

தேங்காய் – 1/4 கப்

வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது

சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

முந்திரிப்பருப்பு – 4

பச்சைமிளகாய் – 2

கடுகு – 1/2 டேபிள்ஸ்பூன்

கடலைப்பருப்பு – 1/2 டேபிள்ஸ்பூன்

உளுந்தம் பருப்பு – 1/2 டேபிள்ஸ்பூன்

பெருங்காயத்தூள் – சிறிதளவு

வெந்தயப்பொடி – 1/4 டேபிள்ஸ்பூன்

காய்ந்த மிளகாய்‌ – 2

கருவேப்பிலை – 1 கொத்து

எண்ணெய் – தாளிப்பதற்கு

உப்பு – தேவையான அளவு

செய்முறை :

புளித்த தயிர், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை‌ ஒன்றாக கலக்கவும்.

பிறகு ஒரு மிக்சியில் முந்தரி, துருவிய தேங்காய், சீரகம், பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு‌ அடுப்பில் ஒரு கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் சேர்த்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து பிறகு கருவேப்பிலை, காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி பிறகு பெருங்காயத்தூள் சேர்த்து சிறிது வதக்கவும்.

பிறகு அரைத்து வைத்த விழுது, தயிர் கலவை சேர்த்து சிறிது நேரம் வேக வைத்து, கொதிப்பதற்கு முன் இறக்கவும்.

இப்போ சுவையான மோர் குழம்பு தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *