இன்றைய பதிவில் மிகவும் சுவையான ஆப்பிள் மில்க் ஷேக் எவ்வாறு சுலபமாக செய்யலாம் என்று பார்க்கலாம்.

ஆப்பிள் மில்க் ஷேக் செய்ய தேவையான பொருட்கள் :
ஆப்பிள் : 1
பால் : 1/2 கப்
சர்க்கரை : தேவையான அளவு
பாதாம், முந்தரி : சிறிதளவு
செய்முறை :
முதலில் ஆப்பிள் எடுத்து சுத்தமாக கழுவி தோல் எடுத்து சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
பாதாம், முந்தரி இரண்டையும் சிறியதாக உடைக்கவும்.
பிறகு மிக்ஸியில் நறுக்கிய ஆப்பிள், பால், சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
பிறகு ஒரு கிளாஸில் ஊற்றி அதன் மீது முந்தரி, பாதாம் சேர்த்து அனைவருக்கும் பரிமாறலாம்.