இந்த உணவுகளை  மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் பல பிரச்சனைகள் ஏற்படும்!!!

இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் பல பிரச்சனைகள் ஏற்படும்!!!

இன்றைய காலத்தில் சாப்பிட்டு மீதி இருக்கும் உணவை குளிர்சாதப்பெட்டியில் வைத்து மறுநாள் சூடுபடுத்தி சாப்பிடுவது வழக்கமாக உள்ளது . குளிர்சாதப்பெட்டியில் வைக்கும் உணவை மறுநாள் சூடுபடுத்தி சாப்பிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்படி உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடும் போது அதிலுள்ள சத்துகள் குறைகிறது. அந்த வகையில் எந்த எந்த உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

சாதம் :

நாம் அதிக அளவில் சாப்பிடும் பொருளில் சாதம் முக்கிய இடத்தில் உள்ளது. சாதத்தை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் போது விஷமாக மாறுகிறது.

சமையல் எண்ணெய் :

எல்லா வகை சமையல் எண்ணெய் அடர்த்தியாக இருக்கும். சமையல் எண்ணெய் மறுபடியும் சூடுபடுத்தி சாப்பிடும் போது அதன் அடர்த்தி அதிகரித்து பல நோய்கள் ஏற்படுகிறது.

முட்டை :

முட்டையில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது. வேகவைத்த முட்டையை அல்லது வறுத்த முட்டையோ மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் போது, அது விஷமாக மாறி செரிமான பிரச்சனை ஏற்படுகிறது. எனவே முட்டை மீண்டும் சூடுபடுத்த கூடாது.

கீரை :

கீரையில் இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளது. கீரையை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் போது செரிமான பிரச்சனை ஏற்படுவதோடு, புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

சிக்கன் :

சிக்கனில் புரதச்சத்து உள்ளது. புரதச்சத்து அதிகம் உள்ள உணவு செரிமானம் ஆக அதிக நேரம் ஆகிறது. சிக்கனை மறுபடியும் சூடுபடுத்தி சாப்பிடும் போது புட் பாய்சனாக மாறுகிறது.

காளான் :

காளானில் அதிக அளவு சக்தி உள்ளது. காளானை சமைத்து அப்போதே சாப்பிடும் போது அதிக அளவில் நன்மை கிடைக்கிறது. அதுவே காளானில் உள்ள புரோட்டீன் காளானை இரண்டாம் முறை சூடுபடுத்தும் போது விஷமாக மாறி வயிறு பிரச்சனைக்கு ஆளாக வேண்டியதா இருக்கும்.

உருளைக்கிழங்கு :

உருளைக்கிழங்கு சமைத்து ஃபிரிட்ஜில் வைத்து மறுபடியம் சாப்பிடும் போது அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் வயிற்றுக்குள் சென்று வயிறு பிரச்சனை ஏற்படுகிறது.

பீட்ரூட் :

கீரைகளில் எவ்வாறு நைட்ரேஸ் உள்ளதோ அதே மாதிரி பீட்ரூட்டில் உள்ளது. அதனால் பீட்ரூட் சூடுபடுத்த கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *