ஆயுசுக்கும் கால்சியம் குறைபாடு வராமல் தடுக்க சாப்பிட வேண்டிய 10 உணவுகள்!!!

நமது உடம்பில் கால்சியம் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும், பற்களின் உறுதிக்கும் அவசியமான சக்தியாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இதயம் சீராக இருப்பதற்கும், தசை, நரம்பு மண்டலம் சீராக, சிறப்பாக செயல்பட கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்றைய காலகட்டத்தில் உணவு பழக்கம் முற்றிலும் மாறி விட்டது. அது மட்டும் இல்லாமல் வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கம் மாறுவதால் நிறைய பேர் கால்சியம் குறைபாடால் அவதிப்படுகிறார்கள்.

கால்சியம் குறைபாடு யாருக்கெல்லாம் அதிகமாக வரும் :-

டீ, காபி குடிப்பவர்கள், ஜீரண கோளாறு இருப்பவர்களுக்கு, தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், முதியவர்களுக்கும் கால்சியம் குறைபாடு இருக்கும்.

ஆண்களை விட பெண்களுக்கு தான் கால்சியம் குறைபாடு அதிகம் காணப்படுகிறது.

கால்சியம் குறைபாடை எவ்வாறு கண்டறிவது:-

முதுகு, கை, கால்களில் வலி ஏற்படுவது, சருமம் வறண்டு போவது, முடி கொட்டுவது, தசை பிடிப்பு, உடல் சோர்வடைவது இந்த அறிகுறிகள் இருந்தால் கால்சியம் குறைபாடு காரணங்களால் வருவது.

கால்சியம் குறைபாடு போக என்ன செய்ய வேண்டும் :-

கால்சியம் குறைபாடு சரியாக மாத்திரை, மருந்துகள் இல்லாமல் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு முறைகளால் எளிதாக குணப்படுத்தலாம். இப்போது கால்சியம் குறைபாடு நீங்க எந்த எந்த உணவுகளை உட்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.

பால் :-

பாலில் கால்சியம் அதிகமாக உள்ளது. 200ml பாலில் 250mg கால்சியம் உள்ளது. கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் காலை, மாலை இரு வேளைகளில் பால் குடிப்பதால் கால்சியம் குறைபாடு குறையும். சில பேருக்கு பால் பிடிப்பதில்லை. பால் பிடிக்காதவர்கள் பால் சார்ந்த உணவுகள் தயிர், மோர், வெண்ணெய், சீஸ், பட்டர், பன்னீர் போன்ற உணவுகள் சாப்பிடலாம்.

முட்டை :-

கால்சியம் சத்து அதிகம் உள்ள உணவுகளில் முட்டை முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு அவித்த முட்டையில் 25mg அளவு கால்சியம் உள்ளது. கால்சியம் மட்டும் அல்லாமல் உடலுக்கு தேவையான வைட்டமின், மினரல்ஸ் அதிக அளவில் உள்ளது. கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் தினமும் முட்டை சாப்பிடலாம்.

எள்ளு :-

எள்ளு வில் அதிக அளவு கால்சியம் உள்ளது. 200gm எள்ளு வில் 1950mg கால்சியம் உள்ளது. மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்கள் எள்ளு எண்ணெய், எள்ளு உணவுகளை அடிக்கடி சாப்பிடலாம்.

மீன் :-

மத்தி மற்றும் சாலமன் வகை மீன்களில் அதிக அளவில் கால்சியம் உள்ளது. 200gm மீன் துண்டில் 30mg கால்சியம் உள்ளது. அன்றாடம் மீன் உணவில் சேர்த்துக்கொள்ளும் போது கால்சியம் குறைபாட்டை தவிர்க்கலாம்.

பாதாம் :-

நட்ஸ் வகையில் பாதாமில் கால்சியம் நிறைய உள்ளது. 200gm பாதாமில் 520mg கால்சியம் உள்ளது. தினமும் பாதாமை 10 அல்லது ஒரு கை அளவில் பாதாம் எடுத்து முதல் நாள் இரவு ஊறவைத்து மறுநாள் காலையில் அந்த பாதாமை சாப்பிட்டால் உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கும்.

கேழ்வரகு :-

சிறுதானியங்கள் நிறைய இருக்கு ஆனால் சிறுதானியங்களில் கேழ்வரகில் அதிகமாக கால்சியம் உள்ளது. 200gm கேழ்வரகில் 688mg கால்சியம் உள்ளது. கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு வேளை உணவாக கேழ்வரகு மாவால் ஆன புட்டு, இட்லி, களி, கஞ்சி, உப்புமா, கேழ்வரகு ஸ்நாக்ஸ் என்று தொடர்ந்து சாப்பிடலாம்.

சோயா பீன்ஸ் :-

200gm சோயா பீன்ஸ் சில் 454mg கால்சியம் உள்ளது. சோயா பீன்ஸ் சுண்டல் அல்லது குழம்பு வகையில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கால்சியம் உடலில் அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *