அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய அட்டகாசமான புத்தம் புதிய சமையல் டிப்ஸ்!!!

அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய அட்டகாசமான புத்தம் புதிய சமையல் டிப்ஸ்!!!

நறுக்கிய வெங்காயம் நீண்ட நேரம் பிரஷ்ஷாக இருக்க நறுக்கிய வெங்காயத்தில் சிறிது வெண்ணெய் கலந்து வைத்தால் நீண்ட நேரம் பிரஷ்ஷாக இருக்கும்.

இட்லி சாம்பாரில் கடைசியாக காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், கொத்தமல்லி சேர்த்து வறுத்து சாம்பாரில் சேர்த்தால் சாம்பார் கூடுதல் சுவையாக இருக்கும்.

உருளைக்கிழங்கு வறுவல் செய்யும் போது புளிப்பு இல்லாத தயிர் சிறிது சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

காய்கறிகள் மற்றும் பழங்களில் இருக்கும் கிருமிகள் அழிய குளிர்ந்த நீரில் வினிகர் சேர்த்து கழுவினால் கிருமிகள் இருக்காது.

பயிறு வகைகளில் சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து கிளறி வைத்தால் பல நாட்கள் வரை புழுத்து போகாமல் இருக்கும்.

பூரி செய்ய மாவு பிசையும் போது, மாவு பிசைந்து விட்டு உடனே பூரி செய்ய வேண்டும். அப்படி இல்லாமல் அதிக நேரம் கழித்து பூரி சுட்டால் எண்ணெய் அதிகமாக குடிக்கும்.

வெண்ணெயில் உப்பைத் தூவி வைத்தால் வெண்ணெய் அதிக நாட்கள் கெடாமல் இருக்கும்.

வாழைத்தண்டு வாங்கும் போது மேல்பகுதியில் நார் அதிகம் இல்லாமல், உள்பகுதியில் தண்டு சிறுத்து இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *