அதிக உடல் எடையா? இனி கவலை வேண்டாம்…

அதிக உடல் எடையா? இனி கவலை வேண்டாம்…

இன்றைய காலத்தில் நிறைய நபர்கள் உடல் எடையால் அவதிப்பட்டு‌ வருகிறார்கள். உடல் எடை குறைய நிறைய வழிகளில் முயற்சி செய்தும் எந்த பலனும் அளிக்கவில்லை என்று நினைப்பார்கள். நீங்கள் எவ்வளவு‌ முயற்சி செய்திருப்பீர்கள் கண்டிப்பாக இந்த பதிவு உங்களுக்கு தான். இந்த பதிவில் நாம் உடல் எடையை குறைக்க கூடிய சில எளிய வழிகளை பற்றி பார்க்கலாம்.

சோம்பு தண்ணீர்:

தாகமாக இருக்கும் போது சாதாரண தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக , சோம்பு கலந்த நீரை குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையை குறைக்கலாம்.

எலுமிச்சை சாறு:

தினமும் டீ குடிப்பதற்கு பதிலாக, எலுமிச்சை சாறு கலந்த நீரை குடித்து வந்தால் விரைவில் உடல் எடை குறையும்.

பப்பாளி காய்:

பப்பாளிக் காயை அவ்வப்போது சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும்.

சுரைக்காய்:

வயிற்றில் சேர்ந்துள்ள கொழுப்பைக் கரைப்பதில் சுரைக்காய் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே வாரத்திற்கு ஒரு முறை சுரைக்காயை உணவில் சேர்க்கலாம்.

அருகம்புல் ஜூஸ்:

அருகம்புல் ஜூஸை தினமும் காலையில் ஒரு டம்ளர்‌ குடித்து வந்தால் உடல் எடை விரைவில் குறையும்.

வாழைத்தண்டு ஜூஸ்:

வாழைத்தண்டு ஜுஸில் உப்பு சேர்க்காமல் குடித்து வந்தால்‌ சிறுநீரக கல் வராமலும் தடுக்கும், உடலில் இருக்கும் கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையும் குறையும்.

அமுக்கிரா நீர்:

தினமும் ஒரு டம்ளர் அமுக்கிரா வேர் மற்றும் சோம்பு சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறைவதை நன்கு பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *