5 மணி நேரத்தில் மரு உதிர மிக மிக எளிமையான வீட்டு வைத்தியம் !!!

5 மணி நேரத்தில் மரு உதிர மிக மிக எளிமையான வீட்டு வைத்தியம் !!!

இன்றைய பதிவில் நாம் மரு உதிர எளிமையான வைத்தியம் பற்றி பார்க்கலாம். இன்றைய காலத்தில் ஆண்களும் சரி, பெண்களும் சரி முகத்தை பளபளப்பாக, பளிச்சென வைத்துக்கொள்ள நிறைய ஆர்வமாக பல எளிய வீட்டு வைத்தியம் செய்கிறார்கள். ஆனால் முகத்தில், கழுத்தில் மரு நீக்க எத்தனை வைத்தியம், கிரீம், எண்ணெய், என்று பல பொருட்களை எடுத்தாலும் நீங்குவதில்லை. சில நபர்கள் முடி கொண்டும் மருவை கட்டுவார்கள். ஆனால் மரு கொட்டாமல் அப்படியே தான் இருக்கும். இரண்டு பொருட்களை வைத்து எளிமையாக நாம் மருவை வேறோடு அழிக்க முடியும் அதுவும் 5 மணி நேரத்தில்.

ஒரு மரு இருந்தால் ஒரு சின்ன வெங்காயம் போதும். நிறைய மரு இருந்தால் அதற்கு ஏற்றவாறு சின்ன வெங்காயம் எடுத்துக்கொள்ளவும். சின்ன வெங்காயம் எடுத்து மேல் இருக்கும் தோல் எடுத்து விட்டு சிறிய துண்டுகளாக வெட்டி, மிக்ஸியில் அரைத்து அதன் சாறை நன்றாக பிழிந்து அரை டீஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். பிறகு தூள் உப்பு கால் டிஸ்பூன் எடுத்து, வெங்காய சாறுடன் நன்றாக குழைத்து கொள்ள வேண்டும். பிறகு காட்டன் பஞ்சு எடுத்து தண்ணீரில் நனைத்து நன்றாக பிழிந்து, மரு இருக்கும் இடத்தை சுத்தம் செய்ய வேண்டும். பிறகு அந்த காட்டன் பஞ்சு தண்ணீரில் சுத்தம் செய்து நன்றாக பிழிந்து எடுத்து, வெங்காய சாறுடன் தொட்டு மரு இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். சாறு தீரும் வரை தடவ வேண்டும். கடைசியாக சாறுடன் பஞ்சு எடுத்து மரு மீது ஒட்டி விட வேண்டும். இவ்வாறு செய்யும் போது மரு இருக்கும் இடத்தில் அரிப்பு, எரிச்சல் உண்டாகும். இவ்வாறு உண்டாகும் போது மரு வேர் அழிந்து விடும். இவ்வாறு செய்யும் போது 5 மணி நேரம் கழித்து மரு வேறோடு அழிந்து விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *