3 நாட்களில் பாத வெடிப்பு சரியாக அருமையான டிப்ஸ்..!

3 நாட்களில் பாத வெடிப்பு சரியாக அருமையான டிப்ஸ்..!

இன்றைய பதிவில் நாம் பாதங்களில் ஏற்படும் வெடிப்பு எவ்வாறு வீட்டில் இருந்தே குணப்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

பாத வெடிப்பு அதிகமாக ஆண்களை விட பெண்களுக்கு தான் வருகிறது. வெடிப்பு வருவதற்கு முக்கிய காரணம் பெண்கள் தான் அதிக அளவில் தண்ணீரில் வேலை செய்கிறார்கள். அதிகளவில் தண்ணீரில் வேலை செய்வதால் கால்கள் ஈரமாக இருக்கிறது. இதனால் வெடிப்பு ஏற்படுகிறது.

பாத வெடிப்பை போக பல வகையில் செலவு செய்து வைத்தியம் செய்கிறோம். ஆனால் வெடிப்பு மறையாது.

இந்த பதிவில் நாம் எவ்வாறு வீட்டில் இருந்தே அதிக செலவு இல்லாமல் எளிமையாக வெடிப்பு எவ்வாறு சரிசெய்யலாம் என்று பாரக்கலாம்.

குறிப்பு 1:

எலுமிச்சை பழத்தோலுக்கு கிருமிகளை அழிக்கும் சக்தி உள்ளது. தினமும் எலுமிச்சை பழத்தோலை பாதங்களில் நன்றாக தேய்த்து வந்தால் பாத வெடிப்பு குணமாகும்.

குறிப்பு 2:

இரண்டு ஸ்பூன் சர்க்கரை, சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கால்களில் மசாஜ் செய்து வரலாம்.

குறிப்பு 3:

வெதுவெதுப்பான நீரில் கால்களை சிறிது நேரம் ஊறவைத்து பிறகு கிளிசரின், பன்னீர், எலுமிச்சை பழச்சாறு சேர்த்து பாத வெடிப்பு இருக்கும் இடத்தில் பூசி வர 3 நாட்களில் வெடிப்பு மறைந்து பாதம் மென்மையாகும்.

குறிப்பு 4:

தேங்காய் எண்ணெய், விளக்கு எண்ணெய் இரண்டும் சம அளவில் எடுத்து அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பாதங்களில் பூசி வரலாம்.

குறிப்பு 5:

மருதாணி இலையை நன்றாக அரைத்து பாத வெடிப்பு உள்ள இடத்தில் பூசி வரலாம்.

குறிப்பு 6:

கடுகு எண்ணெயை தினமும் கால்களில் தடவி வந்தால் வெடிப்பு விரைவில் குணமாகும்.

குறிப்பு 7:

பப்பாளி பழத்தை பிசைந்து அதில் எலுமிச்சை பழச்சாறு கலந்து நன்றாக கலக்கி பாத வெடிப்பு இருக்கும் இடத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவலாம்.

குறிப்பு 8:

இரவு தூங்குவதற்கு முன் கால்களை நன்றாக கழுவி சிறிது தேங்காய் எண்ணெய் தேய்த்து வரலாம்.

குறிப்பு 9:

பப்பாளி பழத்தை நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடத்தில் தேய்த்து காய்ந்த பிறகு கழுவி வந்தால் வெடிப்பு விரைவில் குணமாகும்.

குறிப்பு 10:

வெந்தயக்கீரை அரைத்து கால்களில் பூசி வரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *