இன்றைய பதிவில் நாம் ஹேர் டிப்ஸ் பற்றி பார்க்கலாம். இந்த ஹேர் ஆயில் பயன்படுத்துவதன் மூலம் ஒரு வாரத்தில் முடி வளரும், அடர்த்தியாக்கவும் இருக்கும். ஓரே ஒரு பொருளை வைத்து ஹேர் ஆயில் எப்படி தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
முடி நீளமாக அடர்த்தியாக வளர நாம் பயன்படுத்த போகும் பொருள் வேம்பாலம்பட்டை. வேம்பாலம்பட்டை பயன்படுத்துவதால் முடி நீளமாக, கருப்பாக அடர்த்தியாக வளரும்.

இந்த பட்டை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வேம்பாலம்பட்டை விலையும் குறைவாக தான் இருக்கும். முடி வளர்ச்சியாக இருக்க நிறைய டிப்ஸ் பார்த்து இருப்பீங்க. அது எதுவமே வேண்டாம். இந்த ஒரு பொருள் மட்டும் போதும் முடி நீளமாக அடர்த்தியாக வளரும்.
தயாரிக்கும் முறை :
முதலில் ஒரு சிறிய அளவில் பாத்திரம் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் சிறிது அளவில் வேம்பாலம்பட்டை, சுத்தமான தேங்காய் சேர்த்து ஒரு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். இரவு முழுவதும் ஊறவைக்கும் போது எண்ணெயின் நிறம் சிவப்பாக மாறும். பிறகு ஒரு பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும்.
இந்த எண்ணெய் தேய்க்கும் போது முடி காடு போல் அடர்த்தியாக, நீளமாக வளரும்.