முகத்தில் இருக்கும் தழும்பு மறைய இதை மட்டும் பயன்படுத்துங்க..!

முகத்தில் இருக்கும் தழும்பு மறைய இதை மட்டும் பயன்படுத்துங்க..!

இன்றைய பதிவில் நாம் முகத்தில் இருக்கும் தழும்பு மறைய எளிமையான வீட்டு வைத்தியம் பற்றி பார்க்கலாம். எந்த எந்த தழும்புகள் எல்லாம் குணப்படுத்தும் என்ற சந்தேகம் வரும் தையல் போட்டதால் வந்த தழும்பு, வெட்டுக்காய தழும்பு, அம்மை தழும்பு, முகத்தில் இருக்கும் பரு தழும்பு சரிசெய்ய இயற்கையான வீட்டு வைத்தியம் பற்றி பார்க்கலாம்.

எவ்வாறு தயார் செய்யலாம்:

கசகசா – 1 ஸ்பூன்

வேப்பிலை – 10

கஸ்தூரி மஞ்சள் – 1 ஸ்பூன்

இந்த பொருட்கள் எல்லா இந்த அளவுகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கஸ்தூரி மஞ்சள் கட்டியாக இருக்கும் அதை வாங்கி பவுடராக அரைத்துக்கொள்ளவும்.

தயார் செய்யும் முறை:

முதலில் கசகசாவை 5 மணி நேரம் முன்பு 2 டீஸ்பூன் பால் அல்லது தண்ணீர் சேர்த்து ஊறவைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கசகசாவை ஊற வைக்கும் போது அரைக்கும் போது சுலபமாக இருக்கும்.

பிறகு இடி உரல் (இஞ்சி பூண்டு இடிக்கும் உரல்) எடுத்து அதில் வேப்பிலை, ஊற வைத்த கசகசா, கஸ்தூரி மஞ்சள் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு இடித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு காரம் இல்லாத கிண்ணத்தில் மாற்றிக்கொள்ள வேண்டும்.

தயார் செய்த பிறகு எந்த இடத்தில் தழும்பு, வெட்டுக்காயம் இருக்குதோ அந்த இடத்தில் இரவு தூங்குவதற்கு முன்பு தடவிவிட்டு இரவு முழுவது‌ம் அப்படியே விட்டு மறுநாள் காலையில் எழுந்து கழுவ வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

குறிப்பு :

ஆண்கள் இதை பயன்படுத்துகிறீர்கள் என்றால் கஸ்தூரி மஞ்சளுக்கு பதிலாக ஓமம் பயன்படுத்தலாம்.

இதை தயார் செய்து உடனே பயன்படுத்த வேண்டும். தினமும் அரைத்து பயன்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *