பொடுகு பிரச்சனை சரியாக இதை ட்ரை பன்னுங்க போதும்!!!

பொடுகு பிரச்சனை சரியாக இதை ட்ரை பன்னுங்க போதும்!!!

பொடுகு பிரச்சனை அனைவருக்குமே ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. பொடுகு வருவதற்கும் நிறைய காரணங்கள் உள்ளது.

வறண்ட சருமம், ஹார்மோனகளில் ஏற்படும் மாற்றம், மனஅழுத்தம், முறையற்ற உணவுப்பழக்கம், தலையைச் சுத்தமாக பராமரிக்காதது போன்ற பல பிரச்சனைகளால் பொடுகு ஏற்படுகிறது. பொடுகு பிரச்சனை சரியாக சில எளிய குறிப்புகள் பற்றி பார்க்கலாம்…

டிப்ஸ் 1:

தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரம் கலந்து வைத்துக்கொண்டு தினமும் தலையில் தேய்த்து வரலாம்.

டிப்ஸ் 2:

அருகும் புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து காயவைத்து, ஆறவைத்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து தினமும் தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறையும்.

டிப்ஸ் 3:

வேப்பிலை சிறிது அளவு எடுத்து, அதனுடன் கொஞ்சம் மிளகு சேர்த்து நன்றாக அரைத்து ஒரு மணி நேரம் தலையில் ஊறவைத்து பிறகு அலசலாம்.

டிப்ஸ் 4:

ஒரு கப் மரிக்கொழுந்து, அரை கப் வெந்தயக்கீரை இரண்டும் சேர்த்து அரைத்து தலைக்கு பேக் போட்டு 10 நிமிடம் கழித்து தலைக்கு குளித்தால் பொடுகு மறைந்து விடும்.

டிப்ஸ் 5:

பசலை கீரை அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு இருக்காது.

டிப்ஸ் 6:

வேப்பிலை சாறு, துளசி சாறு சேர்த்து கலந்து தலையில் தேய்த்து வரலாம்.

டிப்ஸ் 7:

இலுப்பை புண்ணாக்கு வாங்கி பொடி செய்து நீரில் கலக்கி தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை இருக்காது.

டிப்ஸ் 8:

மருதாணி இலை அரைத்து அதனுடன் சிறிது தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கி தலையில் பூசி வர பொடுகு தொல்லை நீங்கும்.

டிப்ஸ் 9:

வேப்பம் பூவை வாட்டி தலையில் கட்டினால் பொடுகு மட்டும் இல்லாமல் பேன், ஈறு போன்ற அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.

டிப்ஸ் 10:

தேங்காய் எண்ணெயுடன், வேப்பெண்ணையும் சேர்த்து காய்ச்சி தலையில் தேய்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *