நீங்கள் சமைக்கும் உணவு சுவையாக இருக்க வேண்டுமா? அப்போ இதை டிரை பன்னுங்க!!!

நீங்கள் சமைக்கும் உணவு சுவையாக இருக்க வேண்டுமா? அப்போ இதை டிரை பன்னுங்க!!!

சமையல் டிப்ஸ்:

👌 அதிரசம் செய்யும் போது, மாவுடன் விதை இல்லாத பேரீச்சம் பழங்களைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிச் சேர்த்து அதிரசம் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

👌 ஃப்ரூட் சாலட் செய்யும் போது, சர்க்கரைக்குப் பதிலாக நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொண்டால், அதிக சுவையாகவும் இருக்கும். உடலில் நிறைய சக்தியும் அதிகரிக்கும்.

👌 கேரட் அல்வா செய்யும் போது, தோல் சீவிய கேரட்டுகளை குக்கரில் வேக வைத்து நன்றாக மசித்துக்கொள்ளவும். பிறகு கடாயில் இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு மசித்த கேரட்டுடன் சம அளவு சர்க்கரை சேர்த்து நன்றாகக் கிளறினால் கேரட் அல்வா தயார்.

👌 பாயசம் செய்யும் போது, பாலுடன் பாதாம் அல்லது பிரட்டை பொடியாக செய்து சேர்த்தால் பாயசம் கெட்டியாகவும், ருசியாகவும் இருக்கும்.

👌 குலோப் ஜாமூன் உள்ளே வேகாமல் இருந்தால், ஜீராவுடன் ஜாமூன் சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு, குக்கர் உள்ளே வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கினால் சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

👌 பாதுஷா செய்யும் போது, மாவில் கொஞ்சம் தயிர் விட்டுப் பிசைந்தால் பாதுஷா மிகவும் மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.

👌 சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது, அரிசிக்கு ஏற்ப எவ்வளவு வெல்லம் போடுகிறோமோ, அதில் பாதி சர்க்கரை சேர்த்து பாகு செய்தால் சர்க்கரை பொங்கல் ருசியாக இருக்கும்.

👌 ரவா லட்டு பிடிக்கும் போது ரவையுடன் ஒரு கரண்டி பாலை சேர்த்து பிடித்தால் சுலபமாக பிடிக்க வரும். சுவையும் அதிகமாக இருக்கும்.

👌 அவசரப் பாயசம் செய்ய இரண்டு முந்திரிப் பருப்பு, கொஞ்சம் கசகசாவை நன்கு அரைத்துக் கடலை மாவில் சேர்த்து கொதிக்க விட்டு, சாதத்தையும், சர்க்கரையையும் மிக்ஸியில் போட்டு அரைத்துப் பால் சேர்த்தால் சுவையான பாயசம் தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *