தோசையை இப்படி ஒரு முறை புது சுவையில் செஞ்சி அசத்துங்க!!!

எப்போதும் ஒரே மாதிரியான தோசை சாப்பிட்டு அலுத்துவிட்டதா? அப்படி என்றால் இந்த பதிவில் நீங்கள் புது சுவையை தெரிந்துக்கொள்ள போகிறீர்கள். அது மட்டும் இல்லாமல் இந்த தோசையை மட்டும் சாப்பிடலாம் சட்னி எதுவும் தேவையில்லை.

இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇

https://t.me/health_tips_tamil

இந்த பதிவில் நாம் மிகவும் சுவையான வெங்காய பொடி தோசை ரெசிபி பற்றி பார்க்கலாம்.

வெங்காய பொடி தோசை செய்ய தேவையான பொருட்கள் :

தோசை மாவு – 1 கப்

இட்லி பொடி – தேவையான அளவு

வெங்காயம் – 1

கொத்தமல்லி – தேவையான அளவு

செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் தோசை மாவை மெல்லிய தோசையாக ஊற்றவும்.

பின்னர் அதன் மேல் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி மற்றும் இட்லி பொடி தூவி, மேலே எண்ணெய் ஊற்றி வேக வைக்க வேண்டும்.

பின்பு தோசையை திருப்பி போட்டு 1 நிமிடம் வேக வைத்து எடுக்கலாம்.

இப்போது சூடான சுவையான வெங்காய தோசை ரெடி.

இதற்கு தொட்டு கொள்ள எதுவும் தேவையில்லை. சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

நம் முன்னோர்கள் கோடை காலத்தில் தண்ணீரை விட நீர் மோர் அதிகம் அருந்தியதின் ரகசியம் என்ன தெரியுமா?? மோர் குளிர்ச்சிக்கு மட்டும் அல்ல!!👇👇👇

https://bit.ly/3JPSH8S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *