டேபிள் அளவு இடம் இருந்தால் போதும் தினமும் கிலோ கணக்கில் விற்கலாம்.

டேபிள் அளவு இடம் இருந்தால் போதும் தினமும் கிலோ கணக்கில் விற்கலாம்.

வணக்கம் நண்பர்களே..!

அனைவருக்கும் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அனைவராலும் அதிக முதலீடு செய்து தொழில் ஆரம்பிக்க முடிவதில்லை. சிறிய முதலீடு இருந்தால் நல்லா இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு இந்த தொழில் அருமையான தொழிலாக உள்ளது.

இன்றைய பதிவில் நாம் தினமும் 4ஆயிரம் வருமானம் தரக்கூடிய சூப்பரான தொழிலை பற்றி பார்க்கலாம். இந்த தொழிலுக்கு வீட்டில் சிறிய இடம் இருந்தால் போதும். இது என்ன தொழில் என்று இந்தப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தொழில்:

இந்த பதிவில் நாம் வெந்தயம் பவுடர் தயார் செய்யும் தொழிலை பற்றி பார்க்கலாம். வெந்தயம் பவுடர் நிறைய இடங்களில் பயன்படுத்துகிறார்கள். உணவுக்காக மட்டும் இல்லாமல், முடி பிரச்சனை சரிசெய்கிறது, சர்க்கரை நோய் சரிசெய்கிறது, தோல் சம்மந்தமான பிரச்சனைக்கு என்று பல பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக உள்ளது.

தொழில் விவரம் :

இந்த தொழில் செய்வதற்கு முக்கியமாக வெந்தயம் தேவைப்படுகிறது. வெந்தயம் வாங்கும் போது மொத்தமாக வாங்கும் வேண்டும்.

மொத்தமாக வாங்கும் போது 1 கிலோ 70ரூ கிடைக்கிறது. வெந்தயம் தரத்திற்கு ஏற்றவாறு வெந்தயம் விலை கிடைக்கிறது.‌ ஆனால் 1 கிலோ வெந்தயம் பவுடர் 700ரூ வரை விற்பனை செய்கிறார்கள்.

மூலப்பொருட்கள் :

வெந்தயம்

பேக்கிங் கவர்

பேக்கிங் மிஷின்

இயந்திரம் :

வெந்தயம் பவுடர் செய்ய பல்வரைசர் இயந்திரம் உள்ளது. இந்த இயந்திரம் வாங்கியும் இந்த தொழில் செய்யலாம். இயந்திரத்தின் விலை 10ஆயிரத்தில் இருந்து கிடைக்கிறது. எல்லா ஆன்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கிறது.

இயந்திரம் வாங்க முடியவில்லை என்றால் வீட்டில் இருக்கும் மிக்சியில் அரைத்துக் கொள்ளலாம்.

தயார் செய்யும் முறை :

வெந்தயம் மொத்தமாக வாங்கி கல், தூசி எதுவும் இல்லாமல் சுத்தம் செய்து அரைத்துக்கொள்ளவும். பிறகு ஆரவைத்து சலித்து பேக் செய்து விற்பனை செய்யலாம்.

முதலீடு :

மிஷின் இல்லாமல் இந்த தொழிலை ஆரம்பிக்கிறீர்கள் என்றால் 1000ரூ முதலீடு செய்தால் போதும்.

விற்பனை இடம் :

தயார் செய்த வெந்தயம் பவுடரை மளிகை கடை, சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில், ஆன்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *