டீ போடும் நேரத்தில் இந்த ஸ்வீட் செய்து அசத்துங்க வீட்டுக்கு விருந்தாளி வந்தாலும் கவலை வேண்டாம்..!

டீ போடும் நேரத்தில் இந்த ஸ்வீட் செய்து அசத்துங்க வீட்டுக்கு விருந்தாளி வந்தாலும் கவலை வேண்டாம்..!

இன்றைய பதிவில் நாம் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் வாழைப்பழம் இனிப்பு போண்டா எவ்வாறு செய்யலாம் என்று பார்க்கலாம். இந்த போண்டா செய்ய அதிகம் நேரம் தேவையில்லை மிகவும் சுலபமாக 10 நிமிடத்தில் செய்து அசத்தலாம். டீ போடும் நேரத்தில் செய்து அசத்தலாம். இப்போது எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் – 3

சர்க்கரை பவுடர் – 1/2 கப்

மைதா – 1 கப்

தேங்காய் ( துருவியது ) – 3 டீஸ்பூன்

ஏலக்காய் பவுடர் – 1/4 டீஸ்பூன்

பேக்கிங் சோடா – 2 பின்ச்

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

முதலில் சர்க்கரை மிக்ஸி கின்னத்தில் சேர்த்து அதனுடன் வாழைப்பழம் சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

பிறகு ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் மைதா சேர்த்துக்கொள்ளவும். அதனுடன் தேங்காய் துருவல், ஏலக்காய் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலக்கவும். தண்ணீர் சேர்க்க கூடாது.

பிறகு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடு படுத்த வேண்டும். எண்ணெய் சூடு ஆனதும் மிதமான தீயில் வைத்து தயார் செய்த மாவை உங்களுக்கு விருப்பமான வடிவத்தில், அளவில் எண்ணெயில் பொறித்து எடுக்கலாம்.

இப்போது சுவையான வாழைப்பழம் போண்டா தயார்.

வீட்டிலே குழந்தைகளுக்கு எளிமையாக தயார் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *