சொன்னா நம்ப மாட்டீங்க அனுபவம் உள்ள மளிகை கடை அண்ணாச்சி சொன்ன ரகசிய கிச்சன் குறிப்புகள்!!!

சொன்னா நம்ப மாட்டீங்க அனுபவம் உள்ள மளிகை கடை அண்ணாச்சி சொன்ன ரகசிய கிச்சன் குறிப்புகள்!!!

குறிப்பு 1:

நெய் :

நாம் கடையில் இருந்து வாங்கிட்டு வரும் நெய் கொஞ்ச நாட்கள் மட்டுமே நல்ல வாசனையாக இருக்கும். நாள் ஆக ஆக நெய் வாசனை இருக்காது, கெட்டுப்போக ஆரம்பிக்கும். அப்படி ஆகாமல் நாம் நெய் வாங்கும் போது எவ்வாறு நல்ல வாசனையாக இருக்குமோ அவ்வாறு நல்ல வாசனையாக கெட்டுப்போகாமல் இருக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

நெய் வாங்கிட்டு வந்தவுடன் நெய் பிரித்து சில்வர் பாத்திரம் அல்லது கண்ணாடி பாட்டில் எடுத்து அதில் முதலில் 8 வெந்தயம் சேர்த்து பிறகு அதில் நெய் ஊற்றி வைத்தால், நெய் தீர்ந்து போகும் வரை நெய் புதிதாக இருக்கும்.

குறிப்பு 2:

பூண்டு :

மழைக்காலத்தில் பூண்டு சீக்கிரமாக கெட்டு போகும். பூண்டு 6 மாதங்கள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

முதலில் ஒரு கடாயில் சிறிது உப்பு சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு உப்பு சூடு ஆறிய பிறகு பூண்டு எந்த பாத்திரத்தில் வைக்கிறீர்களோ அந்த டப்பாவில் அடியில் உப்பு சேர்த்து, பிறகு பூண்டு சேர்த்து வைத்தால் பூண்டு கெட்டுப் போகாமல் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *