குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை..!

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை..!

குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர்களுக்கு மிக முக்கிய பங்கு உள்ளது. ஒரு குழந்தை நல்ல மனிதனாக வளர்வது அந்த குழந்தை சிறு வயதில் இருந்தே நல்ல பழக்கங்களை கற்று வளர்ந்தால் தான் ஒரு நல்ல மனிதாக வாழ்வார்கள்.

பெற்றோர்கள் மீது குழந்தைகளுக்கு வெறுப்பு வராமல், அன்பு மட்டுமே இருக்குமாறு வளர்க்க வேண்டும். அதற்கு குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை சொல்லிக்குடுக்கும் போது வற்புறுத்தாமல், நல்ல பழக்கங்களை வெளிப்படையாக புரியுமாறு கற்றுக்குடுக்க வேண்டும்.

இந்தப்பதிவில் குழந்தைகளை எவ்வாறு பழக்கவழக்கங்களை கற்றுத் தர வேண்டும் என்று பார்க்கலாம்.

குழந்தைகள் தூங்கும் நேரம் :

குழந்தைகளுக்கு இரவில் தினமும் ஒரே நேரத்தில் தூங்கும் பழக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும். தினமும் 8-9 மணி நேரம் தூங்குவது அவசியம். தினமும் குழந்தைகள் ஒரே நேரத்தில் தூங்கும் போது ஆரோக்கியமான, ஒழுங்கான வாழ்க்கையை கற்றுக்கொள்கிறார்கள்.

அதே நேரம் குழந்தைகள் அதிக நேரம் தூங்க கூடாது. அதிக நேரம் தூங்கினால் உடல் நலத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும்.

முக்கியமாக குழந்தைகளை காலையில் எழுப்பும் போது அன்பாக எழுப்ப வேண்டும் அடித்தோ, சத்தமாக பேசி குழந்தைகளை எழுப்ப கூடாது.

பல் துலக்குதல்:

குழந்தைகளுக்கு தினமும் பல் துலக்கும் பழக்கத்தை கற்றுக்கொடுங்கள். இரு வேளையும் குழந்தைகள் பல் துலக்க வேண்டும். அடம் பிடிக்கும் குழந்தைகளாக இருந்தால் நீங்களே இரு வேலையும் பல் துலக்கி விடுங்கள்.

பல் துலக்கினால் என்ன என்ன நன்மை கிடைக்கும், பல் துலக்காவிட்டால் பற்களில் ஏற்படும் பிரச்சனைகளை எடுத்து கூறி குழந்தைகளுக்கு தினம்தோறும் காலை எழுந்ததும், இரவு உறக்கத்திற்கு செல்லும் முன் பல் துலக்கும் பழக்கத்தை கற்றுக்குடுங்கள்.

சாப்பிடும் பழக்கம்:

குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே எப்படி ஒழுங்காக அடக்கமாக உட்கார்ந்து சாப்பிட வேண்டும், சாப்பிட்ட இடங்களை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்றும், சாப்பிடும் முன்பு கைகளை எவ்வாறு கழுவ வேண்டும் சாப்பிட்டு முடித்த பின் எவ்வாறு கழுவ வேண்டும் என்று சொல்லி குடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை வீட்டிலே சமைத்துக் கொடுக்க வேண்டும். அதிகமாக வெளியில் தயாரிக்கும் பொருட்களை சாப்பிடாமல், வீட்டில் காய்கறிகள், கீரைகள் என்று ஆரோக்கியமான உணவுகள், பழங்களை குடுக்கலாம்.

மரியாதை செலுத்துதல்:

குழந்தைகளிடம் சிறு வயதில் இருந்தே எவ்வாறு பெரியவர்களிடம் மரியாதையாக பேச வேண்டும், மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுத்தர வேண்டும்.

பகிர்ந்து கொள்ளுதல் :

குழைந்தைகள் மற்றவர்களுக்கு அவர்களது பொருட்களையும், உணவு பொருட்களையும் பகிர்ந்துகொள்ள கற்றுத்தர வேண்டும்.

டிவியை அதிக நேரம் பார்க்க விடாமல், விளையாட்டில் ஈடுபட்டு, நீங்களும் ஓய்வு நேரங்களில் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடலாம். இதனால் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

சேமிப்பு :

சிறு வயதில் இருந்தே சேமிக்கும் பழக்கத்தை கற்றுத் தர வேண்டும். தேவையாக இருக்கும் பொருட்களை மட்டுமே வாங்க பழக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *