காரசாரமான செட்டிநாடு நண்டு தண்ணீர் குழம்பு

காரசாரமான செட்டிநாடு நண்டு தண்ணீர் குழம்பு

இந்த பதிவில் நாம் செட்டிநாடு ஸ்டைல் நண்டு தண்ணீர் குழம்பு எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம். நண்டு குழம்பு நெஞ்சு சலி இருப்பவர்கள் சாப்பிடும் போது சீக்கிரமாக குணமாகும். இப்போ எவ்வாறு தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.

நண்டில் அதிக அளவு புரோட்டீன் சக்தி உள்ளது. நண்டு சமைத்து மழைக்காலங்களில் சாப்பிடும் போது உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கும்.

சமைத்து சுவைத்து சுவை எவ்வாறு இருக்கிறது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇

https://t.me/health_tips_tamil

தேவையான பொருட்கள் :

நண்டு : அரை கிலோ

வெங்காயம் : 4

தக்காளி : 3

இஞ்சி பூண்டு பேஸ்ட் : 2 டேபிள் ஸ்பூன்

வரமிளகாய் : 4

மிளகாய் தூள் : 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் : 1/2 டீஸ்பூன்

கரம் மசாலா : 1/2 டீஸ்பூன்

மல்லி : 2 டீஸ்பூன்

மிளகு : 2 டீஸ்பூன்

சீரகம் : 1 டீஸ்பூன்

சோம்பு : 1/2 டீஸ்பூன்

தேங்காய் ( துருவியது ) : 3 டேபிள் ஸ்பூன்

முந்தரி : 5

பச்சை மிளகாய்: 4

கறிவேப்பிலை : 2 கொத்து

கொத்தமல்லி : தேவைக்கேற்ப்ப

உப்பு : தேவையான அளவு

எண்ணெய் : தேவையான அளவு

செய்முறை :

😋 முதலில் நண்டு சுத்தமாக கழுவி தண்ணீர் இல்லாமல் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

😋 பிறகு சுத்தமான தண்ணீர் நண்டு இருக்கும் பாத்திரத்தில் நண்டு மூழ்கும் அளவிற்கு ஊற்றி அடுப்பில் வைத்து மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கி தண்ணீர் வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும். இவ்வாறு செய்யும் போது நண்டு வாடை வராது, சாப்பிடும் போது மென்மையாக இருக்கும்.

😋 பின் ஒரு வாணலில் மிளகு, சோம்பு, சீரகம் சேர்த்து லேசாக வறுக்கவும். வறுத்து மிக்சியில் சேர்த்து அரைத்து, அதனுடன் தேங்காய், முந்தரி, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

😋 அதன் பிறகு ஒரு அகலமான வாணலை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

😋 பிறகு தக்காளி சேர்த்து வதக்கி, கரம் மசாலா, உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி நண்டு சேர்த்து கிளறி 5 நிமிடம் மூடி வைத்து, பிறகு அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.

😋 இப்போது சுவையான காரசாரமான செட்டிநாடு நண்டு தண்ணீர் குழம்பு தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *