
விருந்து என்றாலே அதில் எல்லா உணவும் இருந்தாலும் கடைசியில் ரசம் வந்துதான் அந்த விருந்தே பூர்த்தி ஆகும். கல்யாண வீட்டு ரசம் என்றால் ருசிக்கு மட்டும் இல்லாமல், ஜீரணத்திற்கு, சளி போன்றவற்றில் இருந்து நிவாரணம் பெறவும் உதவுகிறது. இப்போ நாம் கல்யாண ஸ்டைல் ரசத்தை வீட்டிலே செய்து அசத்தலாம் வாருங்கள்!!!
இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇https://t.me/health_tips_tamil
முதலில் ரசப்பொடியை தயார் செய்து கொள்ளலாம்

தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு – 250 கிராம்
தனியா – 30 கிராம்
மிளகு – 75 கிராம்
சீரகம் – 75 கிராம்
பெருங்காயம் – 10 கிராம்
வரமிளகாய் – 20
கறிவேப்பிலை ( காய்ந்தது ) – ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள்- 4 டீஸ்பூன்
செய்முறை
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக வறுத்துக் கொள்ளவும். வறுக்கும் போது எண்ணெய் விட கூடாது. மஞ்சள் தூள் மட்டும் வறுக்க கூடாது. வறுத்த பொருட்களை ஆற வைத்து, மிக்ஸியில் வறுத்த பொருட்கள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இப்போ ரசப்பொடி தயார். தயார் செய்த ரசப்பொடியை ஏர் டைட் பாக்ஸில் ஸ்டோர் பன்னி வைத்துக் கொள்ளலாம். நீங்கள் ரசம் வைக்கும் போது, இந்த பொடியை சேர்த்துக் கொள்ளலாம்.
கல்யாண ரசம் செய்ய தேவையான பொருட்கள்
பாதி எலுமிச்சை அளவில் புளி எடுத்து கழுவி ஊறவைத்துக் கொள்ளவும்.
பூண்டு 10 பல் தோலுடன் தட்டி வைத்துக் கொள்ளவும்
தக்காளி பழுத்த பழம் ஒன்று.
பச்சைமிளகாய் இரண்டு
கடுகு, சீரகம் சிறிதளவு ( தாளிக்க)
எண்ணெய், உப்பு தேவையான அளவு
கொத்தமல்லி தேவையான அளவு
கல்யாண ரசப் பொடி 3 டீஸ்பூன்
கல்யாண ரசம் செய்முறை
பூண்டு இடித்து வைத்துக் கொள்ளவும்.
புளியை கரைத்து, வடி கட்டி எடுத்துக் கொள்ளவும்.
பச்சை மிளகாய் நடுவில் கீறி எடுத்துக்கொள்ளவும்.
பிறகு புளிக் கரைசலில் இடித்து வைத்த பூண்டு, பச்சை மிளகாய் தக்காளி சேர்த்து நன்கு பிசையவும்.
இதில் 3 டீஸ்பூன் ரசப்பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
பிறகு அடுப்பில் வாணலியை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பிறகு கரைத்து வைத்த புளிக் கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு கொத்தமல்லி இலையை சேர்த்து அடுப்பை அனைத்தால் மண மணக்கும் ரசம் தயார்.
கல்யாண ரசத்தை மட்டும் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்க வைக்கும் போது தான் அதன் சுவை அதிகரிக்கும்.
இந்தியாவிலே ஒரு சில நபர்கள் மட்டுமே செய்யும் தொழில்