ஒரு வயது குழந்தைக்கு தினமும் தர வேண்டிய உணவுகள்!!!

குழந்தை பிறந்து 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும். 6 மாதங்கள் ஆன பிறகு ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே தர வேண்டும். ஏனெனில் இந்த பருவத்தில் உங்கள் குழந்தைக்கு கொடுக்கும் உணவுகள் தான், அவர்களது வளர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கின்றன. அதனால் குழந்தை ஆறு மாதம், ஒரு வயது ஆகி விட்டால் அவர்களது உணவின் மீது அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

குழந்தை 1 வயது ஆனதும் அனைத்து வகையான உணவுகளையும் குடுக்கலாம். பழங்கள், கீரைகள், காய்கறிகள், முட்டை, மீன், சிக்கன், மட்டன் என் அனைத்து வகையான உணவுகளும் கொஞ்சம், கொஞ்சமாக கொடுத்து பழக வேண்டும்.

இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇

https://t.me/health_tips_tamil

காலை உணவு :-

குழந்தைகளுக்கு காலை உணவில் பொங்கல், இட்லி, தோசை, மசித்த சாதத்துடன் உருளைக்கிழங்கு, சத்து மாவு கஞ்சி, கம்பு கஞ்சி, கூல், காய்கறிகள் சேர்த்து சமைத்த உப்புமா அனைத்து வகையான சட்னி, கொடுக்கலாம்.

சிகப்பு அவல், முளைக்கட்டிய சத்துமாவு தோசை, சிறுதானிய கிச்சடி, வாழைப்பழ ஆம்லெட், வாழைப்பழம், ஆப்பிள், மக்கா சோள உப்புமா, ரவா இட்லி, முட்டை பொறியல், பாசிப்பருப்பு தோசை இந்த மாதிரி உணவுகளை தினமும் காலையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவாக சமைத்து கொடுக்கலாம்.

காலை உணவு, மதிய உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் 11 மணி அளவில் கோதுமை அல்வா, பழக்கலவை, முட்டை டோஸ்ட், ட்ரை புரூட்ஸ், முளைக்கட்டிய ராகி மால்ட், அவல் லட்டு, பிரௌனி, மாம்பழ டேட்ஸ் ஸ்மூத்தி, டேட்ஸ் லட்டு, மஞ்சள் பாதாம் பால், ஹோம் மேட் புரூட்டி, இந்த மாதிரியான உணவுகளை கொடுக்கலாம்.

மதிய உணவு :-

பாலக்கீரை கிச்சடி, சாம்பார் சாதம், பன்னீர் சேன்விச், பருப்பு கிச்சடி, முட்டை சாதம், வெஜிடபிள் பிரைட் ரைஸ், கீரையை நன்கு வேகவைத்து சாதத்துடன் பிசைந்து கொடுக்கலாம், கீரை கிச்சடி, சான்விச், நெய் சாதம், சிக்கன், ரசம் சாதம், தயிர் சாதம், வெஜ் புலாவ், சிறு தானிய கிச்சடி, வேகவைத்த முட்டை, சிகப்பு அரிசி சாதம் இந்த மாதிரியான உணவுகளை மதிய உணவாக கொடுக்கலாம்.

மாலை ஸ்நாக்ஸ் :-

மாலை 5 மணி அளவில் பழங்கள், கீரை நட்ஸ், பால், நட்ஸ் மில்க் ஷேக், வாழைப்பழ ஓட்ஸ் கஞ்சி, பழங்களிலான ஜூஸ், பேக்டு உருளை, உளுந்து வடை, ஜவ்வரிசி கஞ்சி, கேழ்வரகு லட்டு, ப்ரூட் சாலட், மினி இட்லி, பேரிசசம் பழம், வெஜிடபிள் சூப், ஓட்ஸ் உப்புமா, சத்துமாவு, ராகி சாக்லெட் போன்றவற்றை கொடுக்கலாம்.

இரவு உணவு :-

இரவு நேரங்களில் இட்லி, தோசை, காய்கறி தோசை, வெஜிடபிள் சப்பாத்தி, வெஜ் உப்புமா, கொண்டைக்கடலை பட்டீஸ், அவல் உப்புமா, சேமியா, இடியாப்பம், ஊத்தப்பம், குதிரை வாலி தோசை, ஆப்பிள் கிச்சடி, வாழைப்பழக்கூழ், வெண்பொங்கல், ஆப்பம் குருமா உணவுகளை கொடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *