
கோடை காலத்தில், வெளியில் சென்று வந்தவுடன் முகம் கருமையாக மாறிவிடும். முகத்தில் முகப்பருக்கள் கருமை நிறம் போன்ற பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகள் வராமல் தடுத்து முகம் பளபளப்பாக சில எளிய குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.
இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇
https://t.me/health_tips_tamil
குறிப்பு 1 :

பழுத்த வாழைப்பழத்தை பாலில் கலந்து பூசினால் முகம் பளபளப்பாக மாறும்.
குறிப்பு 2 :

வெயிலில் சென்று வந்தபின் முகம் எரிச்சலாக இருந்தால் மோர் 1 ஸ்பூன், தக்காளி சாறு 1 ஸ்பூன் எடுத்து நன்கு கலந்து பஞ்சில் நனைத்து முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடம் கழித்து, முகம் கழுவினால், முகம் குளிர்ச்சியாக இருக்கும்.
குறிப்பு 3 :

சந்தனம், மஞ்சள், பால், கடலை மாவு அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி, 30 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாக, அழகாக மாறும்.
குறிப்பு 4 :

ஒரு தேக்கரண்டி துளசி இலைச் சாற்றுடன் அரை தேக்கரண்டி தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் சருமம் பளபளப்பாக மாறும்.
குறிப்பு 5 :

தேங்காய் பாலுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து முகத்தில் 5 நிமிடம் மசாஜ் செய்தால் முகம் புத்துணர்ச்சி பெறும்.
குறிப்பு 6 :

இரவு தூங்கும் முன் சிறிதளவு பன்னீரை எடுத்து, முகம் முழுவதும் தடவி, மறுநாள் காலையில் முகம் கழுவினால் முகத்தில் இருக்கும் கருமை நிறம் நீங்கி முகம் பளிச்சென்று ஜொலித்திடும்.
குறிப்பு 7 :

ஒரு நாளைக்கி குறைந்தது 8 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போது தான் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி முகத்தில் பிரச்சனை ஏற்படாது.
குறிப்பு 8 :

பசும்பாலில் ஒரு தேக்கரண்டி கசகசாவை இரவில் போட்டு ஊறவைத்து, காலையில் அரைத்து முகத்தில் தேய்த்து வர முகம் சிகப்பழகாக மாறும்.
குறிப்பு 9 :

எலுமிச்சை சாறில் பாசிப்பயிறு மாவு கலந்து முகத்தில் தடவி, ஒரு மணி நேரம் கழித்து கழுவினால் முகம் நல்ல நிறமாக மாறும்.
குறிப்பு 10 :

பால் ஏட்டில் சில துளிகள் எலுமிச்சை பழச் சாறு கலந்து முகத்தில் தடவி, காய்ந்த பிறகு கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.
விடுகதைகள்