எலும்பு தேய்மான பிரச்சனையை தீர்க்கும் கேழ்வரகு இட்லி!!!

எலும்பு தேய்மான பிரச்சனையை தீர்க்கும் கேழ்வரகு இட்லி!!!

உலகிலேயே மிகச் சிறந்த உணவு என்றால் அது இட்லி தான். ஏனெனில் ஆவியில் வேகவைத்து சாப்பிடும் எந்த உணவுமே உடலுக்கு மிகவும் நல்லது.

கேழ்வரகில் பல நன்மைகள் உள்ளது. கேழ்வரகில் இட்லி செய்து சாப்பிடும் போது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. முக்கியமாக எலும்பு தேய்மான பிரச்சனையை சரிசெய்கிறது.

கேழ்வரகில் இட்லி செய்து சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும். அனைத்து சக்தியும் தரக்கூடிய இந்த கேழ்வரகு இட்லி எவ்வாறு செய்வது என்பதை பார்க்கலாம்.

கேழ்வரகு இட்லியில் இருக்கும் பலன்கள் :

எலும்பு தேய்மான பிரச்சனையை சரிசெய்கிறது.

கேழ்வரகில் கால்சியம் சத்து நிறைய உள்ளது.

இரத்த சோகை உள்ளவர்களுக்கும், நீரழிவு நோய் உள்ளவர்களுக்கும் நல்ல உணவாகும்.

கேழ்வரகு இட்லி செய்ய தேவையான பொருட்கள் :

கேழ்வரகு – 2 கப்

வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன்

இட்லி அரிசி – 1 கட்

உளுந்து – 1 கப்

உப்பு – தேவையான அளவு

செய்முறை :

முதலில் மேற்கூறிய பொருட்கள் எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக 4 முறை கழுவி, 5 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

பிறகு இட்லி மாவு பதத்திற்கு அரைத்து உப்பு சேர்த்து, மறு நாள் காலையில் இட்லி ஊற்றலாம்.

இட்லி பாத்திரத்தில் இட்லி அவிப்பது போல், இட்லி ஊற்றி 15 முதல் 20 நிமிடம் வரை வேக வைக்க வேண்டும்.

கேஷ்வரகு சேர்க்கப்பட்டதால் 15 முதல் 20 நிமிடம் வேகவைக்க வேண்டும்.

இப்போது சுவையான ஆரோக்கியமான கேழ்வரகு இட்லி தயார்.

கேழ்வரகு இட்லி அடிக்கடி வீட்டில் செய்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *