எண்ணெய் வழியும் முகம் உங்களுக்கு இருக்கா? உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்..!

எண்ணெய் வழியும் முகம் உங்களுக்கு இருக்கா? உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்..!

வணக்கம் நண்பர்களே..!

எல்லாருக்கும் முகம் அழிகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் சிலர் முகத்தில் எண்ணெய் அதிகமாக வழியும். இதனால் அவர்கள் முகம் கலையிழந்து காணப்படும்.

முகத்தில் எண்ணெய் அதிகம் வருவதற்கு முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பி அதிக அளவில் சுரப்பதால் தான் ஏற்படுகிறது. இதனை எளிய முறையில் வீட்டில் இருந்தே எவ்வாறு எளிய முறையில் நீக்கலாம் என்று பார்க்கலாம்.

குறிப்பு 1:

எண்ணெய் வழியும் முகம் உள்ளவர்களாக இருந்தால் வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும், கடலை மாவு எடுத்து அதில் சிறிது தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகம் கழுவினால் முகத்தில் வழியும் எண்ணெய் குறையும்.

குறிப்பு 2:

முட்டையின் வெள்ளைக்கருவுடன் சிறிது பால் சிறிது கேரட் துருவலை சேர்த்து கலந்து முகத்தில் பூசி கழுவி வர எண்ணெய் வடிவதை தடுக்கலாம்.

குறிப்பு 3:

முகத்தில் மோர் தடவி சிறிது நேரம் கழித்து கழுவலாம்.

குறிப்பு 4:

சோள மாவு, தயிர், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி வர முகத்தில் எண்ணெய் பசை நீங்கும்.

குறிப்பு 5:

வெள்ளரிக்காயை தினம்தோறும் காலையில் முகத்தில் தேய்த்து கழுவலாம்.

குறிப்பு 6:

முகத்தில் எண்ணெய் பசை உள்ளவர்கள் சோப்புக்கு பதிலாக கடலை மாவு பயன்படுத்தி அடிக்கடி முகத்தை கழுவலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *