இன்றைய பதிவில் நாம் முகம் வெள்ளையாக, பளபளப்பாக மாற இயற்கையான ஃபேஸ் பேக் கிரீம் வீட்டிலே எவ்வாறு எளிமையாக செய்யலாம் என்று பார்க்கலாம். கெமிக்கல் கலந்த கிரீம் முகத்தில் பூசும் போது முகத்தில் இருக்கும் தோல் சுருங்கும். அதுவே வீட்டில் இயற்கையாக தயாரிக்கும் கிரீம் முகத்தில் ஞபயன்படுத்தும் போது எந்த விதமான பாதிப்பும் வராது, முகம் பளபளப்பாக வெள்ளையாக மாறும்.
கிரீம் தயார் செய்யும் முறை :
கிரீம் தயார் செய்ய மிகவும் எளிமையான பொருள் கற்றாழைதான் தேவைப்படுகிறது. கற்றாழை தோல் சீவி உள்ளே ஜெல் பதத்தில் இருக்கும் கற்றாழை ஜெல் மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.

தனியாக எடுத்த கற்றாழை ஜெல் தண்ணீரில் நான்கு முறை கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு கத்தியில் சிறிய சிறிய துண்டுகளாக ஜெல் பதத்திற்கு வெட்டிக்கொள்ளவும்.
பிறகு ஜெல் எடுத்து காத்து போகாதவாறு ஒரு டப்பாவில் சேர்த்து, ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும், கலந்து ஃபிரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.
எப்போது பயன்படுத்துவது :
தயார் செய்த ஜெல்லை இரவு தூங்கும் முன்பு 3 சொட்டு எடுத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி இரவு முழுவதும் அப்படியே விட்டு மறுநாள் காலையில் முகம் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர முகம் பளபளப்பாக சுருக்கம் எதுவும் இல்லாமல் அழகாக மாறும்.