இரவு தூங்குவதற்கு முன்பு இதை டிரை பன்னி பாருங்க! சருமம் பளபளப்பாக ஜொலிக்கும்!!!

இரவு தூங்குவதற்கு முன்பு இதை டிரை பன்னி பாருங்க! சருமம் பளபளப்பாக ஜொலிக்கும்!!!

பொதுவாக அனைவருமே முக அழகிற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். முகம் அழகாக இருக்க பல இடங்களுக்கு செல்வார்கள் அதிக பணம் செலவழிப்பார்கள். பல விதமான பொருட்களை கொண்டு முகம் அழகாக இருக்க முயற்சி செய்வார்கள். ஆனால் முகத்தை அவர்கள் நினைத்தது போல் பொலிவாக்க முடியாது.

ஆனால் இந்த பதிவில் நாம் இரவு தூங்குவதற்கு முன்பு செய்ய வேண்டிய சில குறிப்புகளை பற்றி பார்க்கலாம். இவ்வாறு செய்தால் போதும் முகம் இயற்கையாகவே அழகாக மாறும்.

குறிப்பு 1:

நாம் காலையில் மேக்கப் போடுவோம். மேக்கப் போட்டு இருந்தால் மேக்கப்பை முகத்தில் இருந்து கழுவ வேண்டும். இரவு தூங்குவதற்கு முன்பு முகத்தை கழுவுவதன் மூலம் முகத்தில் இருக்கும் அழுக்கு வெளியே வந்து முகம் பளபளப்பாக இருக்கும்.

குறிப்பு 2:

தினமும் ஆறு மணி நேரத்திற்கு அதிகமாக தூங்க வேண்டும். நன்றாக தூங்குவதால் கண்களுக்கு அடியில் ஏற்படும் கருவளையம் நீங்கி முகம் சோர்வடையாமல் இருக்கும். நன்றாக தூங்குவதால் முகத்திற்கு மட்டும் இல்லாமல் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

குறிப்பு 3:

பொதுவாக நிறைய நபர்கள் இரவில் தலை குளிக்கும் வழக்கம் இருக்கும். இரவில் தலைக்கு குளித்துவிட்டு தலை முடியை நன்றாக ஆறவைத்து விட்டு தூங்க வேண்டும்.

ஈரமான தலையுடன் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.

குறிப்பு 4:

இரவில் முகம் கழுவும் போது அழுத்தி கழுவ கூடாது. வெதுவெதுப்பான நீரில் மெதுவாக கழுவ வேண்டும்.

குறிப்பு 5:

வாரத்திற்கு இரண்டு முறை முகத்திற்கு நீராவி பிடிப்பதால் முகத்தில் இருக்கும் அழுக்கு வெளியே வந்து முகம் மிகவும் அழகாக மாறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *