இனி லிட்டர் கணக்கில் எண்ணெய் வாங்க வேண்டாம் தண்ணீர் மட்டும் போதும் விளக்கு ஏற்ற!

இனி லிட்டர் கணக்கில் எண்ணெய் வாங்க வேண்டாம் தண்ணீர் மட்டும் போதும் விளக்கு ஏற்ற!

நம் அனைவரும் வீட்டில் விளக்கு ஏற்றுவது வழக்கம். விளக்கு ஏற்றும் போது நாம் கடைபிடிக்க வேண்டிய சில சின்ன சின்ன விஷயங்களை செய்தால் போதும். இந்த விளக்கு வீட்டையே நறுமணமாக்கும். அதிக வாசனை தரக்கூடிய தண்ணீர் விளக்கு எவ்வாறு தயார் செய்யலாம் என்று பாரக்கலாம்.

இந்த விளக்கை தயார் செய்வதும் மிகவும் சுலபம். ஒரு சில பொருட்கள் இருந்தாலே தயார் செய்யலாம். ஒரு கண்ணாடி கிண்ணம் எடுத்து அந்த கிண்ணத்தில் பாதி அளவு தண்ணீர் ஊற்றவும். இரண்டு டம்ளார் எடுத்து அதில் பாதியாக தண்ணீர் சேர்க்கவும். அதில் சிறிது கலர் தண்ணீர் சேர்க்கவும். நீலம், பச்சை, மஞ்சள் இந்த மாதிரியான நிறங்கள் எடுத்துக்கலாம். கலர் இல்லை என்றால் மஞ்சள் தூள், குங்குமம், நீலம் இந்த பொருட்கள் எடுத்துக்கலாம். இந்த பொருட்கள் எல்லாம் சிறிது சிறிதாக எடுத்து மூன்று பாத்திரத்தில் சேர்த்து கலக்கவும்.

பிறகு அந்த தண்ணீரில் சிறிது எண்ணெய் ஊற்றவும். இவ்வாறு ஊற்றும் போது தண்ணீர் கீழே நின்று விடும் எண்ணெய் மேல வரும். அதன்பிறகு எசன்சியல் ஆயில் உங்களுக்கு விருப்பமான நறுமத்தில் 3 சொட்டு சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த ஆயில் சேர்க்கும் போது விளக்கு ஏற்றினால் வீடு முழுவதும் நறுமனமாக இருக்கும்.

பிறகு ஒரு பிளாஸ்டிக் பேப்பர் எடுத்து நாம் எந்த கிண்ணத்தில் விளக்கு ஏற்றப்போகிறோமோ அதற்கு ஏற்றவாறு கட் செய்து அந்த பேப்பரை நான்காக மடித்து திரி நுழையும் அளவிற்கு கட் செய்து அந்த வழியே திரி நுழைத்து, திரியின் இரண்டு புறமும் எண்ணெய் தடவி விளக்கு ஏற்றினால் விளக்கு அருமையாக நல்ல வாசனையுடன் எரியும்.

இவ்வாறு விளக்கு ஏற்றும் போது வீடு முழுவதும் நல்ல மணமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *