இனிமே கலர் கோலமாவு வாங்க வேண்டாம் இப்படி செய்யுங்கள் ..!

இனிமே கலர் கோலமாவு வாங்க வேண்டாம் இப்படி செய்யுங்கள் ..!

இன்றைய பதிவில் நாம் வீட்டிலே குறைந்த செலவில் எப்படி அழகான கலர் கோல மாவு தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.

கலர் கோல மாவு

👉 சிவப்பு நிறம் வேண்டுமென்றால் பீட்ரூட் சாறு எடுக்கவும்.

👉 பச்சை நிறம் வேண்டுமென்றால் புதினா அல்லது துளசி இலையில் உள்ள சாறு எடுத்துக்கொள்ளலாம்.

👉 மஞ்சள் நிறம் தேவைப்பட்டால் மஞ்சள் தூள் எடுத்து சிறிது தண்ணீர் விட்டு கலந்து வைத்துக்கொள்ளவும்.

👉 நீலம் கலர் தயார் செய்ய துணிகளுக்கு பயன்படுத்தும் நீலம் எடுத்துக்கொள்ளலாம்.

👉 ஆரஞ்சு கலர் தயார் செய்ய ஆரஞ்சு கேசரி பவுடர் வேண்டும்.

👉கருப்பு நிறத்திற்கு கருப்பு மை எடுத்தைக்கொள்ளவும்.

கலர் கோல மாவு தயார் செய்ய பச்சை அரிசி முக்கால் கப், கோல மாவு கால் கப் சேர்த்து நன்றாக கலக்கி எடுக்கவும். பிறகு அதில் சிறிது கற்பூரம் சேர்த்து நன்றாக கலக்கி நமக்கு எந்த கலர் தேவை என்பதை பார்த்து அதுக்கேற்றவாறு தயார் செய்து வைத்துள்ள நிறத்தை சேர்த்து மிக்சியில் அரைத்து எடுக்கவும்.

பின் வெயில் படாத இடத்தில் நிழல் பகுதியில் தயார் செய்த கலர் கோல மாவு காயவைத்து எடுத்தால் கலர் கோல மாவு தயார்.

நீங்கள் விரும்பிய கோலங்களை தினமும் வாசலில் வரைந்து கலர் சேர்த்து மகிழலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *