இதை செய்தால் தைராய்டை‌ குணப்படுத்தலாம்.

இதை செய்தால் தைராய்டை‌ குணப்படுத்தலாம்.

இன்றைய காலத்தில் தைராய்டு‌ நிறைய நபர்களுக்கு இருக்கிறது. குறிப்பாக பெண்கள் தைராய்டு‌ பிரச்சனையால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். ஆனால் ஒரு சில உணவுகள் முறையாக சாப்பிட்டு வரும் போது தைராய்டு பிரச்சனையை சரிசெய்யலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

காளான் :

காளானில் செலினியம் அதிகமாக உள்ளது. செலினியம் குறைபாடு இருந்தாலும் தைராய்டு வருகிறது. எனவே காளானை‌ அதிகளவில் உண்டுவர தைராய்டு பிரச்சனை‌ குணமாகும்.

ஸ்ட்ராபெர்ரி :

ஸ்ட்ராபெர்ரியில் அதிக அளவில் அயோடின் உள்ளது. உடலில் போதிய அயோடின் இல்லாவிட்டாலும் தைராய்டு‌ ஏற்படுகிறது. எனவே ஸ்ட்ராபெர்ரி பழத்தை உண்டுவந்தால் தைராய்டு‌ பிரச்சனை சரியாகும்.

முட்டை :

முட்டை மற்றும் பாலில் அதிகப்படியான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் அயோடின் உள்ளது. எனவே முட்டை மற்றும் பால் பொருட்கள் தைராய்டு சுரப்பிக்கு மிகவும் நல்லது.

பூண்டு :

பூண்டு பல நோய்களுக்கு சிறந்த தீர்வாக உள்ளது. இதய நோய்க்கு, நீரிழிவு நோய்க்கு மற்றும் தைராய்டு குணப்படுத்துகிறது. ஆகையால் தைராய்டு குணமாக பூண்டு அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

தக்காளி :

தக்காளியில் வைட்டமின்‌ சி அதிக அளவில் உள்ளது. தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் தக்காளியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *