அனைவரும் அவசியம் சாப்பிட வேண்டிய காய் சுண்டைக்காய் ஏன் தெரியுமா ???

அனைவரும் அவசியம் சாப்பிட வேண்டிய காய் சுண்டைக்காய் ஏன் தெரியுமா ???

அனைவரும் கட்டாயம் சாப்பிட வேண்டிய காய் சுண்டைக்காய். காய்கறிகளில் மிகவும் சிறந்த காய் சுண்டைக்காய். சுண்டைக்காயை நுண் ஊட்டச்சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு என்றும் கூட சொல்லலாம்.

✍️ தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி, உடலின் நச்சுக்களை வெளியேற்றும் அற்புத சக்தி உள்ளது.

✍️ வைட்டமின் ஏ, சி, இ போன்ற சத்துக்கள் ஏராளமாக இருக்கிறது.

✍️ நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கிய தேவையான வைட்டமின்-சி சுண்டைக்காயில் அதிகமாக உள்ளது.

✍️ ஆரஞ்சு, கொய்யா, பப்பாளிக்கு நிகரான வைட்டமின்-சி சுண்டைக்காயில் உள்ளது.

✍️ சுண்டைக்காய் உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதோடு, உடலில் இருக்கும் கொழுப்பு கரையவும் உதவுகிறது.

✍️ வெள்ளை இரத்த அணுக்களை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

✍️ நரம்பு மண்டலத்திற்கு சக்தி அளிக்க கூடிய, பார்வைத்திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் கூடவும் இது உதவுகிறது.

✍️ சுண்டைக்காய் கார குழம்பு சாப்பிட்டு வர நெஞ்சில் ஏற்படும் சளிக்கட்டு குறையும்.

✍️ தையமின், ரிபோஃப்ளேவின், வாய் புண்கள், சொத்தைப் பல் உருவாவதையும் தடுக்கிறது.

✍️ சுண்டைக்காயில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. அடிக்கடி குழம்பு வைத்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் உறுதியாக இருக்கும்.

✍️ சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வர பசி உணர்வு அதிகமாகி உடல் ஆரோக்கியம் மேம்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *