அக்குள் கருமை நீங்க சில அற்புதமான இயற்கையான அழகு குறிப்புகள்!!!

அக்குள் கருமை நீங்க சில அற்புதமான இயற்கையான அழகு குறிப்புகள்!!!

பொதுவாக நிறைய பேருக்கு அக்குள் கருமையாக இருக்கும் அதற்கு காரணம் நமது உடலில் மறைவான இடங்களில் காற்றோட்டம் இருக்காது. இதனால் அந்த இடங்களில் அழுக்குகள் சேர்ந்து கிருமிகளாக மாறி கருமையாக மாறுகிறது. எனவே நாம் நமது உடலில் ஏற்படும் கருமை நிறம் மறைய சில இயற்கை அழகு குறிப்புகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

அக்குள் கருமை நீங்க :

குறிப்பு 1 :

ஒரு பௌலில் 1 ஸ்பூன் பேக்கிங் சோடா அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக கலந்து கொண்டு, அக்குளில் சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.இவ்வாறு வாரத்திற்கு 3 முறை பயன்படுத்துவதன் மூலம் அக்குள் கருமை நீங்கி வெள்ளையாக மாறும்.

குறிப்பு 2 :

கோதுமை – 100கிராம், வெட்டி வேர் – 100 கிராம், பாதாம் – 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் – 100 கிராம் இவை அனைத்தும் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். குளிக்கும் போது சோப்புக்கு பதிலாக இதை அக்குள் பகுதியில் பயன்படுத்தி வர, தயக்கமின்றி ஸ்லீவ்லெஸ் உடை அணியலாம்.

குறிப்பு 3 :

அதிமதுர வேரை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து, வாரத்திற்கு ஒரு முறை அக்குளில் தடவி வர அக்குள் வெள்ளையாக மாறி, அக்குளில் துர்நாற்றம் வீசாமலும் இருக்கும்.

குறிப்பு 4 :

தயிர் அக்குளில் இருக்கும் கருமை நீங்க உதவும் முதன்மை மருந்தாகும். தயிருடன் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, சிறிது கடலை மாவு சேர்த்து பேஸ்ட் செய்து அக்குளில் தடவி 20நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் கருமை நீங்கும்.

குறிப்பு 5 :

சருமத்தில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகள் நீங்க வேப்பிலை ஒரு சிறந்த மூலிகை மருந்தாக உள்ளது.

ஆகவே வாரத்திற்கு ஒரு முறை வேப்பிலையை அரைத்து, அக்குளில் தடவி உலர வைத்து கழுவி வர அக்குள் வெள்ளையாக மாறும்.

அக்குள் வியர்வை நாற்றம் நீங்க :

குறிப்பு 1 :

பட்டைத்தூள் 2 டீஸ்பூன், அரை மூடி எலுமிச்சைப் பழம் இரண்டையும் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்தால், நாற்றமும் உடல் வலியும் பறந்து போகும்.

குறிப்பு 2 :

இரவு தூங்குவதற்கு முன்பாக சிறிதளவு வினிகரை பஞ்சில் நனைத்து அக்குள் பகுதியில் தடவி கொள்ள வேண்டும்.

பின்னர் காலையில் ஆன்டி-பாக்டீரியல் சோப் கொண்டு அக்குள் பகுதியை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும்.

இப்படி செய்தால் அக்குளில் வியர்வை நாற்றம் இருக்காது.

அக்குள் முடிகள் அகற்ற :

ஒரு பௌலில் மஞ்சள் தூள் மற்றும் ரோஸ் வாட்டர் அல்லது பால் சேர்த்து பேஸ்ட் செய்ய வேண்டும்.

பின் அதனை அக்குளில் தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் நனைந்த துண்டால் அக்குளைத் துடைத்து எடுக்க வேண்டும்.

இந்த சிகிச்சை அடிக்கடி செய்து வருவதன் மூலம் அக்குளில் உள்ள மயிர்கால்கள் தளந்து, உதிர்ந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *