5 மணி நேரம் வேலை பார்த்தால் போதும் தினமும் 3000ரூ வருமானம் எடுக்கலாம்..!

5 மணி நேரம் வேலை பார்த்தால் போதும் தினமும் 3000ரூ வருமானம் எடுக்கலாம்..!

இன்றைய பதிவில் நாம் எப்பவுமே அதிக அளவில் டிமாண்ட் இருக்க கூடிய அருமையான தொழிலை பற்றி பார்க்கலாம். இந்த தொழிலுக்கு அதிக அளவில் முதலீடு தேவையில்லை. பொருளை தயார் செய்வதற்கு தேவையான மூலப்பொருளும் சுலபமாக கிடைக்கும். இந்த தொழிலில் நாம் பார்க்க போகும் பொருள் நிறைய இடங்களில் முக்கியமான பொருளாக தேவைப்படுது. இப்போ இந்த தொழிலை பற்றி விரிவாக பார்க்கலாம்.

தொழில் :

இந்த பதிவில் நாம் அதிக அளவில் பயன்படுத்த கூடிய கடலை மாவு தயாரிக்கும் தொழிலை பற்றி பார்க்கலாம். கடலை மாவு நிறைய இடங்களில் முக்கியமான பொருளாக பயன்படுத்துகிறார்கள். கடலை மாவை உணவுக்கு மட்டும் இல்லாமல் அழகுக்காவும் பயன்படுத்துகிறார்கள். இப்ப மட்டும் இல்லாமல் எப்பவுமே கடலை மாவு பயன்படுத்துவார்கள் அதனால் இந்த தொழிலுக்கு அழிவே இல்லை.

லைசன்ஸ் :

கடலை மாவு தயாரிக்கும் தொழிலை ஆரம்பிக்கிறீர்கள் என்றால் GST தேவைப்படுகிறது.

FSSAI தேவைப்படுகிறது.

தேவையான மூலப்பொருட்கள் :

கடலை மாவு தயார் செய்ய ஒரே ஒரு பொருள் இருந்தாலே போதும்.

கடலை பருப்பு

பேக்கிங் கவர்

சீலிங் மிஷின்

கடலை பருப்பு வாங்கும் போது மொத்தமாக Wholesale விலையில் வாங்க வேண்டும்.

தயார் செய்யும் முறை :

கடலை பருப்பு எடுத்து தூசி எதுவும் இல்லாமல் சுத்தம் செய்து காய வைக்க வேண்டும். பிறகு இயந்திரத்தில் கொட்டி அரைத்துக் கொள்ள வேண்டும். அரிசி அரைக்கும் இடத்திலே கடலை பருப்பு அரைத்துக் கொள்ளலாம். தனியாக இயந்திரம் எதுவும் வாங்க வேண்டாம். தொழில் பெரிய அளவில் செய்யும் போது இயந்திரம் வாங்கலாம்.

அரைத்த பிறகு கடலை மாவு ஆறவைத்து சலித்து பேக் செய்ய வேண்டும். பேக் செய்யும் போது பேக்கிங் கவர்களில் தேவையான அளவுகளில் பேக் செய்யலாம்.

முதலீடு :

இயந்திரம் வாங்காமல் தொழில் ஆரம்பிக்கிறீர்கள் என்றால் 1500ரூ முதலீடு செய்தால் போதும்.

இயந்திரம் வாங்கும் போது 20,000ரூ முதலீடு செய்ய வேண்டும்.

வருமானம் :

1 கிலோ மாவு தயார் செய்து விற்பனை செய்து போது 70ரூ வரை லாபம் எடுக்கலாம்.

விற்பனை இடம் :

தயார் செய்த கடலை மாவு மளிகை கடைகளில், சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மெண்ட் ஸ்டோர், பேக்கரி என்று அனைத்து இடங்களிலும் விற்பனை செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *