45 நிமிடத்தில் 1000ரூ சம்பாதிக்கலாம்!!!

45 நிமிடத்தில் 1000ரூ சம்பாதிக்கலாம்!!!

இன்றைய பதிவில் நாம் ஒரு குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய ஒரு சூப்பரான தொழிலைப் பற்றி பாரக்கலாம். இந்த தொழிலை ஆண்களும் சரி, பெண்களும் சரி யார்வேண்டுமானாலும் இந்த தொழிலை செய்யலாம். இந்த தொழிலுக்கு தேவையான மூலப்பொருள் நமக்கு சுலபமாக கிடைக்கும். மூலப்பொருள் வாங்கி மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் போது அதிக லாபம் எடுக்கலாம்.

இன்றைய பதிவில் நாம் புளி சாஸ் தொழிலை பற்றி பார்க்கலாம். புளியில் நிறைய பொருள் தயார் செய்கிறார்கள். நாம் எவ்வாறு புளி சாஸ் எளிமையாக தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.

இந்தியாவிலே புளி எங்கு அதிகமாக கிடைக்கும் என்று பார்க்கலாம்.

தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், கர்நாடக, மகாராஷ்டிர இந்த இடங்களில் அதிகமாக கிடைக்கிறது. இந்த தொழிலில் இரண்டு விதமாக லாபம் எடுக்கலாம். புளியில் இருந்து கிடைக்கும் கொட்டையில் இருந்தும் லாபம் எடுக்கலாம். புளி கொட்டை 1 கிலோ புளி கொட்டை 15ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். புளி அதிகம் கிடைக்கும் நேரத்தில் புளி மொத்தமாக வாங்கி ஒரு வாரம் காயவைத்து எடுத்து வைத்தால் புளி கெடாமல் இருக்கும்.

புளி சாஸ் தயாரிக்கும் முறை:

புளி வாங்கி, புளி மேல் இருக்கும் ஓடு எடுக்கு வேண்டும். பிறகு கொட்டை எடுத்து சுத்தம் செய்து ஒரு நாள் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு நன்றாக கரைத்து ஒரு பாத்திரத்தில் கொட்டி அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அதில் வெல்லம், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கி சாஸ் பதத்திற்கு வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும். சாஸ் பதத்திற்கு வந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி ஆரவைத்து விட்டு பிறகு சாஸ் டப்பாவில் பேக் செய்து விற்பனை செய்யலாம்.

வருமானம் :

1 கிலோ புளி நமக்கு 50ரூ கிடைக்கிறது. 1 கிலோ புளி சாஸ் 800ரூ முதல் 1000 ரூ வரை விற்பனை செய்கிறார்கள்.

இந்த தொழிலுக்கு FSSAI லைசன்ஸ் எடுக்க வேண்டும்.

விற்பனை இடம் :

தயார் செய்த இந்த பொருளை பானி பூரி கடைகளில், ஓட்டலில், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில், ஆன்லைன் ஸ்டோர்களில், சூப்பர் மார்க்கெட், மளிகை கடைகளில் விற்பனை செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *