10 நிமிடம் 2 விசில் போதும் சுவையான இட்லி சாம்பார் தயார்..!

10 நிமிடம் 2 விசில் போதும் சுவையான இட்லி சாம்பார் தயார்..!

இட்லி தோசை நாம் சாப்பிடும் போது எத்தனை இட்லி தோசை சாப்பிடுகிறோம் என்பது தொட்டுக்கொள்ளும் சாம்பார், சட்னியின் சுவை பொறுத்து தான் இருக்கிறது. எத்தனை வகை சாம்பார் சட்னி இருந்தாலும் இட்லி சாம்பார் சுவைக்கு ஈடு ஆகாது. 10 நிமிடத்தில் இட்லி சாம்பார் எவ்வாறு சுவையாக, சுலபமாக தயார் செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இட்லி சாம்பார் செய்ய தேவையான பொருட்கள் :

துவரம்பருப்பு – 100 கிராம்

வெங்காயம் – 2

தக்காளி – 4

பச்சை மிளகாய்- 5

கத்தரிக்காய் – 2

கேரட் – 2

உருளைக்கிழங்கு – 2

பூண்டு – 8 பல்

கறிவேப்பிலை – தேவையான அளவு

கொத்தமல்லி – தேவையான அளவு

மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்

தாளிப்பதற்கு :

எண்ணெய் – தேவையான அளவு

கடுகு – 1 ஸ்பூன்

சீரகம் – 1 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 4

பெருங்காயத்தூள் : சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை :

முதலில் குக்கர் எடுத்து பருப்பு நன்றாக கழுவி கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, கேரட், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவைக்க வேண்டும். 2 விசில் வந்ததும் கீழே இறக்கி வைக்க வேண்டும்.

பிறகு நன்றாக மசித்துக்கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காய தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து மசித்து வைத்த சாம்பார் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

பின் கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சுவையான இட்லி சாம்பார் தயார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *