வாரம் 1 முறை இதை குடித்தால் தாங்க முடியாத இடுப்பு வலி, மூட்டு வலி, கழுத்து வலி 1 வாரத்தில் காணமல் போகும்!!!

வாரம் 1 முறை இதை குடித்தால் தாங்க முடியாத இடுப்பு வலி, மூட்டு வலி, கழுத்து வலி 1 வாரத்தில் காணமல் போகும்!!!

இன்றைய காலத்தில் நிறைய நபர்களுக்கு மூட்டு வலி, கழுத்து வலி, கை கால் வலி இருக்கிறது. இந்த வலி வருவதற்கு முக்கியமான காரணம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பது, கால்சியம் சக்தி, இரும்பு சக்தி குறைவாக இருப்பதன் காரணங்களால் தான் இந்த மாதிரியான வலிகள் ஏற்படுகிறது. இந்த வலிகள் குணமாக ஒரு வாரம் தொடர்ந்து இதை கலந்து குடித்தால் உங்கள் வலி எல்லாம் காணமல் போகும்.

இந்த பவுடர் தயார் செய்ய தேவையான பொருட்கள் :

ஜவ்வரிசி : 100 கிராம்

கருப்பு எள் : 100 கிராம்

கருப்பு உளுந்து : 200 கிராம் (தோலுடன்)

பார்லி அரிசி : 100 கிராம்

ஏலக்காய் : 6

சுக்குப்பொடி : தேவைக்கேற்ப

வெல்லம் : சுவைக்கேற்ப்ப

நன்மைகள் :

ஜவ்வரிசியில் அதிகமான சுண்ணாம்பு சக்தி உள்ளது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது இதை சாப்பிடும் போது இடுப்புக்கு வலு சேர்த்து கை கால் வலி, கழுத்து வலி, இடுப்பு வலி குணமாகிறது. யார் வேண்டுமானாலும் இதை சாப்பிடலாம்.

கருப்பு எள்ளில் அதிகப்படியான கால்சியம் சத்து, இரும்பு சத்து உள்ளது. வயதுக்கு வந்த பெண்களுக்கு தருவதால் கர்ப்பப்பை வலுவாக இருக்கும். கர்ப்பப்பை சம்மந்தமான பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கும். கை கால் வலி, இடுப்பு வலி வராது. உடலும் சுறுசுறுப்பாக ஆரோக்கியமாக இருக்கும்.

கருப்பு உளுந்து களியாகவும், நல்லெண்ணெய் சேர்த்து உருண்டையாகவும் பிடித்து குடுக்கலாம். இதனுடன் நாட்டு கோழி முட்டை சேர்த்து வயதுக்கு வந்த பெண்கள் சாப்பிட்டால் அவர்கள் வாழ்நாளில் இடுப்பு வலி, கர்ப்பப்பை சம்மந்தமான பிரச்சனைகள் வராது.

பார்லி அரிசியில் ஏராளமான சத்துக்கள் உள்ளது. எலும்பு தேய்மான பிரச்சனையை சரி செய்கிறது, எலும்புகளுக்கு நல்ல சக்தியை தருகிறது, சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ளது. எந்த மாதிரியான எலும்பு தேய்மான பிரச்சனையும் சரி செய்கிறது. உடலை எப்போதும் சுறு சுறுப்பான வைக்கிறது. பெண்கள் மாதவிடாய் காலத்தில் உடலுக்கு நல்ல வலுவை குடுக்கிறது.

ஏலக்காய் தினமும் சேர்த்து வர உடலுக்கு சுறு சுறுப்பை குடுக்கிறது. வாய் துர்நாற்றம் வராமல் இருக்கிறது.

சுக்குப்பொடி சேர்ப்பதால் வாயுப்பிரச்சனை, செரிமானப்பிரச்சனை இருக்காது.

செய்முறை :

முதலில் ஜவ்வரிசி எடுத்து ஒரு கடாயில் சேர்த்து பெரிதாகும் வரை வறுக்க வேண்டும். பிறகு அதை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைக்கவும்.

பிறகு அடுப்பு தீயை மிதமாக வைத்து கருப்பு எள் சேர்த்து வறுக்க வேண்டும். கருப்பு எள் வெடித்து வரும் போது ஒரு மூடியால் கடாயை மூடி வைக்க வேண்டும். எள் வெடித்து வறுபட்டவுடன் ஒரு தட்டில் கொட்டவும்.

அதே கடாயில் உளுந்து சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும். பிறகு பார்லி அரிசி நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும், அதனுடன் ஏலக்காய் சேர்த்து வறுத்து அடுப்பை நிறுத்தி கடாயை தனியாக இறக்கி வைக்க வேண்டும்.

வறுத்த அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து ஆற வைக்க வேண்டும். பிறகு ஈரம் இல்லாத மிக்ஸியில் வறுத்த பொருட்களை சேர்த்து அரைக்க வேண்டும். பிறகு அதில் தேவைக்கேற்ப சுக்குப்பொடி சேர்த்து நன்றாக கலக்கி ஒரு டப்பாவில் கொட்டி காற்று உள்ளே போகாதவாறு இருக்கமாக மூடி வைக்க வேண்டும். இந்த அளவுகளில் சேர்க்கும் போது 1 மாதம் இந்த பவுடர் வரும்.

தினமும் 1 ஸ்பூன் அளவு பவுடர் எடுத்து தண்ணீர் சேர்த்து கட்டியாக இல்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் 1/4 டம்ளார் அளவில் தண்ணீர் சேர்த்து, அதனுடன் 1 டம்ளார் அளவில் பால் சேர்த்து, ( பால் பதிலாக தண்ணீர் ஒரு டம்ளார் சேர்க்கலாம்). பால் பொங்கி வரும் போது கரைத்து வைத்துள்ள மாவு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். மாவு பொங்கி வந்தவுடன் ஒரு டம்ளாரில் சேர்த்து சுவைக்காக வெள்ளம் சேர்த்து குடிக்கலாம். வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்தது காலையில் டீ, காபி குடிக்காமல் இந்த மாவு கஞ்சி குடிக்கும் போது, கை கால் வலி, இடுப்பு வலி, முட்டு வலி, எலும்பு தேய்மானம் சரி செய்து உடலும் சுறு சுறுப்பாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *