ருசியான மட்டன் சேமியா மறக்காம செய்து பாருங்கள்!!!

ருசியான மட்டன் சேமியா மறக்காம செய்து பாருங்கள்!!!

மட்டன் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதுவும் சேமியாவுடன் மட்டன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் அதன் சுவை வேற லெவல்ல இருக்கும். இந்த பதிவில் நாம் நாவில் ருசி அப்படியே இருக்கும் மட்டன் சேமியா எவ்வாறு செய்யலாம் என்று பார்க்கலாம்.

ருசியான மட்டன் சேமியா செய்ய தேவையான பொருட்கள் :

சேமியா : 1 பாக்கெட்

மட்டன் : 200கிராம் ( கொத்தியது )

வெங்காயம் : 2

தக்காளி : 3 சிறிய அளவில்

பட்டை, கிராம்பு, ஏலக்காய் : 3

இஞ்சி, பூண்டு பேஸ்ட் : 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் : 1 டீஸ்பூன்

தனியா தூள் : 1 டீஸ்பூன்

மட்டன் மசாலா : 1/2 டீஸ்பூன்

எண்ணெய் : 1 ஸ்பூன்

நெய் : 50 கிராம்

புதினா : சிறிதளவு

கொத்தமல்லி : சிறிதளவு

கேசரி பவுடர் : தேவைக்கேற்ப

உப்பு : தேவைக்கேற்ப்ப

செய்முறை :

😋 வெங்காயம் மெலிதாக நீளமாக வெட்டிக்கொள்ளவும். தக்காளியையும் சிறிதாக நறுக்கவும்.

😋 மட்டனை நன்றாக சுத்தமாக கழுவ வேண்டும்.

😋 புதினா, கொத்தமல்லியையும் நறுக்கி சுத்தமாக கழுவி எடுத்துக்கொள்ளவும்.

😋 பிறகு ஒரு கடாயில் எண்ணெய், நெய் சேர்த்து சூடேற்றவும். அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.

😋 பின் வெங்காயம் சேர்த்து சிவக்கும் வரை வதக்கி, அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

😋 பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.

😋 அதன் பின் மட்டன் சேர்த்து வதக்கி மிளகாய்தூள், தனியாதூள், மட்டன் மசாலா, கேசரி பவுடர் சேர்த்து வதக்கவும்.

😋 பிறகு 3 கிளாஸ் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

😋 தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு சேமியா, கொத்தமல்லி, புதினா சேர்த்து கிளறவும்.

😋 தண்ணீர் வற்றியதும் அடுப்பை மெதுவாக வைத்து மூடி போட்டு கனமான பாத்திரத்தில் தண்ணீர் சூடு ஏற்றி மூடி மேல் வைத்து 5 நிமிடம் கழித்து கிளறி இறக்கவும்.

😋 இப்போது சூடான அனைவருக்குமே நாவில் எச்சில் ஊறும் சுவையான மட்டன் சேமியா தயார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *