ராகி குலுக்கு ரொட்டி ( Raagi kulukku rotti )

ராகி குலுக்கு ரொட்டி ( Raagi kulukku rotti )

ராகியில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால், உடலுக்கு வலிமை தரும்; ரத்தச்சோகை வராமல் தடுக்கும். எனவே, இது ரத்தசோகை, உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த மருந்து. ராகி உடல்சூட்டைக் குறைத்து, உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய ஒன்று.

எனவே ராகியில் அவ்வப்போது குழைந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரொட்டி, சேமியா, இட்லி போன்ற உணவுகளை சமைத்து சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம்.

ராகி குலுக்கு ரொட்டி செய்ய தேவையான பொருட்கள் :

ராகி : 2 கப்

பச்சரிசி மாவு : 4 டேபிள் ஸ்பூன்

பொடித்த வெல்லம் : 1 கப்

ஏலக்காய் தூள் : சிறிதளவு

வேர்க்கடலை ( வறுத்து பொடித்து ) : 4 டேபிள் ஸ்பூன்

நெய் : தேவையான அளவு

உப்பு : தேவையான அளவு

தண்ணீர் : தேவையான அளவு

செய்முறை :

முதலில் கேழ்வரகு மாவை லேசாக வறுக்கவும்.

பிறகு அதில் பச்சரிசி மாவு, உப்பு சேர்த்து கலக்கி, தேவையான அளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.

பிறகு தோசைக்கல்லில் மாவை அடைகளாக தட்டி, சுற்றிலும் நெய் விட்டு வேகவைக்கவும். வெந்ததும் சிறு சிறு துண்டுகளாக செய்யவும்.

அடுத்து வெல்லத்துடன் சிறிது நீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, அடுப்பில் வைத்து பாகு பதத்திற்கு வந்தவுடன் வேர்க்கடலை, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும்.

அதில் ராகி ரொட்டித் துண்டுகளை சேர்த்து சாப்பிட்டால் சுவையான ராகி குலுக்கு ரொட்டி தயார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *