முதலீடே வேண்டாம். ஆனால் இந்த தொழிலில் கை நிறைய வருமானம் எடுக்கலாம்..!

முதலீடே வேண்டாம். ஆனால் இந்த தொழிலில் கை நிறைய வருமானம் எடுக்கலாம்..!

வணக்கம் நண்பர்களே..!

இன்றைய பதிவில் நாம் பார்க்க போகும் தொழிலை மிகவும் சுலபமாக செய்யலாம். வேண்டாம் என்று தூக்கிப்போடும் பொருளில் இருந்து தொழிலை செய்து நல்ல வருமானம் எடுக்கலாம். இந்த தொழிலுக்கு முன் அனுபவம் எதுவம் தேவையில்லை. மிகவும் சுலபமாக வீட்டில் இருந்தே இந்த தொழிலை ஆரம்பித்து வாழ்க்கையில முன்னேறலாம். இப்போ இந்த பதிவில் நாம் ஒரு சூப்பரான தொழிலை பற்றி பார்க்கலாம்.

தொழில் :

இந்த பதிவில் நாம் புளி விதையில் இருந்து புளி விதை தூள் தயார் செய்து விற்பனை செய்யும் தொழிலை பற்றி பார்க்க போறோம்.

இந்த பவுடரை அதிக மருத்துவ பயன்களுக்காக பயன்படுத்துகிறார்கள்.

👉 வயிற்றுப்போக்கு சரிசெய்யுது.

👉 பற்களுக்கு பல நன்மைகள் தருகிறது.

👉 தொண்டை புண் பிரச்சனையை சரி செய்கிறது.

👉 அழகு சாதன பொருட்கள் தயார் செய்யவும் பயன்படுகிறது.

இன்னும் பல பிரச்சனைகளை சரிசெய்வதால் இந்த புளி விதை தூளுக்கு எப்பவுமே அதிக அளவுல டிமாண்ட் உள்ளது.

புளியங்கொட்டை பவுடர் தயார் செய்யும் முறை:

முதலில் புளியங்கொட்டை பவுடர் தயார் செய்ய புளியங்கொட்டையை வாங்க வேண்டும். புளி விற்பனை செய்யும் இடங்களில் புளியங்கொட்டை மொத்தமாக வாங்கலாம். பிறகு அதை சுத்தமாக கழுவ வேண்டும். கழுவி தண்ணீர் எதுவும் இல்லாமல் வெயிலில் காய வைக்க வேண்டும்.

நன்றாக காய்ந்த பிறகு ஒரு கடாயில் விதையை கொட்டி வறுத்து, அதன் பின் விதை மேல் இருக்கும் தோலை எடுத்து விதையை அரைத்தால் பவுடர் தயார்.

இவ்வாறு தயார் செய்த பவுடரை 50கிராம், 100கிராம் என்ற அளவில் பேக் செய்து விற்பனை செய்யலாம்.

முதலீடு :

புளியங்கொட்டை இலவசமாக உங்களுக்கு கிடைத்தால் பவுடர் தயார் செய்ய, பேக்கிங் என்று ஆரம்பத்தில் 500ரூ முதலீடு செய்தால் போதும்.

உங்களுக்கு இலவசமாக கிடைக்கவில்லை என்றால் 1000ரூ முதலீடு செய்தால் போதும்.

வருமானம் :

ஒரு கிலோ பவுடர் 300ரூ என்று தினமும் 10 கிலோ விற்பனை செய்தால் 3000ரூ வருமானம் எடுக்கலாம்.

விற்பனை இடம் :

தயார் செய்த பவுடரை நாட்டு மருந்து கடைகளில், அழகு சாதனப்பொருட்கள் தயார் செய்யும் இடங்களில், டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில், சூப்பர் மார்க்கெட், ஆன்லைனிலும் விற்பனை செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *