மாம்பழ பேரீச்சம்பழம் ஸ்மூத்தி

கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் மாம்பழம் எல்லாருக்கும் பிடித்த ஒன்று. கோடைக்காலத்தில் கிடைக்கும் மாம்பழம் வைத்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த பல வகையான ரெசிபிகளை செய்யலாம். ஆனால் சற்று வித்தியாசமாக இன்று நாம் மாம்பழ பேரிச்சம்பழம் ஸ்மூத்தி எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்….

இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇

https://t.me/health_tips_tamil

தேவையான பொருட்கள் :-

மாம்பழம் – 1

பேரீச்சம் பழம் – 10

தேன் – 1 ஸ்பூன்

பால் – 1 கப்

பட்டை தூள் – அரை ஸ்பூன்

ஐஸ்கட்டிகள் – தேவைக்கேற்ப

செய்முறை :-

முதலில் மாம்பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

அதன்பிறகு மிக்சியில் பேரீச்சம் பழம் மற்றும் சிறிது பால் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

அடுத்து அதில் மாம்பழ துண்டுகள், பால், தேன், ஐஸ்கட்டிகள் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

அரைத்த ஜுஸை கண்ணாடி கப்பில் ஊற்றி அதன் மேல் பட்டை தூள் தூவி பருகவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *