பெண்களுக்கு ஏற்ற சிறு தொழில்…!

பெண்களுக்கு ஏற்ற சிறு தொழில்…!

வணக்கம் நண்பர்களே..! இந்த பதிவில் நாம் வீட்டில் இருந்தே செய்யக்கூடிய ஒரு தொழிலை பற்றி பார்க்கலாம். இந்த தொழிலை செய்வதன் மூலம் அதிக லாபம் எடுக்கலாம்.

தொழில் :

இந்த பதிவில் நாம் கிரிஸ்டல் நகை தயாரிப்பு தொழிலை பற்றி பார்க்கலாம்.

எப்போதுமே பெண்களுக்கு நகை மீது நகை மீது அதிக ஆசை இருக்கும். அதிலும் குறிப்பாக கிரிஸ்டல் நகை மீது அதிகமாக உள்ளது காரணம் கிரிஸ்டல் நகைகளில் அதிக கலைநயம் இருக்கும் அதுமட்டும் இல்லாமல் விலையும் குறைவாக இருக்கும். கிரிஸ்டல் நகை மீது அனைத்து பெண்களும் அதிகம் விரும்பி வாங்குகிறார்கள்.

எனவே சிறு தொழில் செய்ய நினைப்பவர்கள், அதுவும் வீட்டில் இருந்தே என்று நினைத்தால் இந்த தொழில் அருமையான தொழிலாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

கிரிஸ்டல் நகை தயார் செய்ய பல வண்ணங்களில் சிறிய மற்றும் பெரிய கிரிஸ்டல், சக்கரியா, பால், வயர், லாக், ஊக்கு, கட்டிங் பிளேடு இந்த மூலப்பொருட்கள் தேவைப்படுகிறது.

இந்த பொருட்கள் எல்லாம் பேன்சி ஸ்டோர்களில் கிடைக்கும்.

தயாரிக்கும் முறை :

குழந்தைகள், சிறுமிகள், பெரியவர்கள், வயதானவர்கள் அவர்களுடைய அளவுக்கு ஏற்ப்ப ஒரு அடி, ஒன்றரை அடி, இரண்டு அடி அளவில் நகைகள் தயார் செய்ய வேண்டும்.

முதலில் எந்த அளவில் தேவையோ அந்த அளவுகளில் வயரை கட் செய்ய வேண்டும். பிறகு டாலர், பால், சக்கரியா, கிரிஸ்டல் கல் என்று சேர்த்தால் கிரிஸ்டல் கல் தயார்.

வருமானம் :

சிறிய நகை, பெரிய நகை என்று மொத்தம் 60 தயார் செய்கிறீர்கள் என்றால் 5000 செலவு ஆகிறது. ஆனால் அந்த நகையை 25 ஆயிரம் விலைக்கு விற்பனை செய்யலாம். இதன் மூலம் 20 ஆயிரம் லாபம் கிடைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *