நீங்கள் சமைக்கும் உணவு இன்னும் ருசியாக..!

நீங்கள் சமைக்கும் உணவு இன்னும் ருசியாக..!

காபி, டீ தயார் செய்யும் போது தண்ணீர் ஒரு கொதி வந்ததும் இறக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக கொதிக்க வைத்தால் அதில் இருக்கும் பிராண வாயு வெளியேறி, தண்ணீர் சுவை மாறி காபி, டீ யின் சுவை மாறி ருசியாக இருக்காது.

சமையல் செய்யும் போது நாம் சின்ன வெங்காயம் சேர்ப்போம். அவ்வாறு சின்ன வெங்காயம் சேர்த்த உடன் சிறிது உப்பு சேர்த்து வதக்கினால் சீக்கிரமாக வதங்கும் ருசியாக இருக்கும.

நாம் காபி தயார் செய்து மற்றவர்களுக்கு குடுக்கும் போது காபி பொங்கி வழியும் நுறையுடன் இருக்க வேண்டுமானால், காபியுடன் ஒரு சிட்டிகை இன்ஸ்டன்ட் காபி பவுடர் கலந்து ஆற்றி குடுக்கும் போது அழகாக நுறையுடன் இருக்கும்.

பலகாரங்கள் நமுத்துப் போகாமல் இருக்க அவை வைக்கப்பட்டுள்ள பாத்திரத்தின் அடியில் உப்பு பொட்டலமாக மடித்து போட்டு வைத்தால் நமுத்து போகாமல் இருக்கம்.

வெண்ணெய் தயார் செய்யும் போது அதில் சிறிது எலுமிச்சை இலைகள் சேர்க்கும் போது நெய் சுத்தமாகவும், நறுமணத்துடன் இருக்கும்.

சமையல் செய்யும் போது மஞ்சள் பொடி சேர்ப்பது, தயார் செய்யும் உணவு நிறமாக இருக்க மஞ்சள் பொடி சேர்ப்போம். அவ்வாறு சேர்க்கும் போது நிறத்திற்கு மட்டும் இல்லாமல், உடல் ஆரோக்கியமாகவும் இருக்க, ஒரு கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது.

சமையல் அறையில் நாம் உப்பு பயண்படுத்துவோம். அந்த உப்பு குளிர் காலங்களில் ஈரமாக ஆகும். இதை தவிர்க்க உப்பில் சிறிது அரிசி சேர்த்து கலந்து வைத்தால் ஈரமாகாது.

சாம்பார், ரசத்தில் கறிவேப்பிலை சேர்ப்போம். ஆனால் நாம் அதை வீணாக போடுவோம். நம் உடலுக்கு கிடைக்கும் சக்தியும் கிடைப்பதில்லை. இதை தவிர்க்க கறிவேப்பிலையை அரைத்து சாம்பார், ரசத்தில் சேர்க்கும் போது சுவையாக இருக்கும், வீணாகாது நமது உடலுக்கு சக்தியும் கிடைக்கும்.

மசாலா பொருட்கள் மணமாகவும், சுவையாகவும் இருக்கும் அதனால் தினமும் உணவில் சேர்த்து ருசியாக சமைப்போம். ஆனால் தினமும் மசாலா பொருட்கள் சேர்க்கும் போது ஜீரண நீர் சுரப்பதை பாதிக்கும்.

நாம் சமைத்து பிறகு குக்கரில் கறை இருக்கும். அந்த கறை தேய்த்தாலும் போகாது, அதற்கு சமைத்து முடித்ததும் குக்கரில் புளித்த மோருடன் தண்ணீர் சேர்த்து வைத்து சிறிது நேரம் கழித்து கழுவினால் பளிச்சென ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *