நம் முன்னோர்கள் கோடை காலத்தில் தண்ணீரை விட நீர் மோர் அதிகம் அருந்தியதின் ரகசியம்  என்ன தெரியுமா?? மோர் குளிர்ச்சிக்கு மட்டும் அல்ல!!!

நம் முன்னோர்கள் கோடை காலத்தில் தண்ணீரை விட நீர் மோர் அதிகம் அருந்தியதின் ரகசியம் என்ன தெரியுமா?? மோர் குளிர்ச்சிக்கு மட்டும் அல்ல!!!

அனைவருக்குமே மோர் குளிர்ச்சியாக இருக்கும் என்று தெரியும். ஆனால், குளிர்ச்சியை தாண்டி பல நன்மைகள் இருக்கிறது. அவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்

இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇

https://t.me/health_tips_tamil

தயிருடன் ஒப்பிடும் போது அதிக ஓட்டு மோருக்கே கிடைக்கிறது. இந்த வெயில் வேலையில் நாம் அனைவருமே குளிர்ச்சியான பொருளை பருகுகிறோம்.

மோர் குளிர்ச்சி யையும் தாண்டி பல்வேறு நன்மைகளை நமக்கு வழங்குகிறது. அவற்றை பற்றி முழு விவரம் பார்க்கலாம்.

காரமான உணவுகளை சாப்பிட்ட பிறகு, வயிற்றில் எரிச்சல் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் மோர் குடிப்பதால் அதிலுள்ள புரதம் காரத்தின் ஆற்றலைக் குறைக்கிறது. இதனால் வயிறு எரிவது குறையும். நெஞ்செரிச்சலுக்கும் இது நல்ல மருந்தாகும்.

மோரில் உள்ள புரதச்சத்து, உடலின் சேரும் கொழுப்பின் அளவையும் குறைக்கிறது. தினமும் மோர் பருகிவந்தால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.

உணவைக் குறைத்து எடையைக் குறைக்க முயலும் போது நீரிழப்பு, சோர்வு போன்றவை ஏற்படுகிறது. அந்த நேரத்தில் மோர் குடிக்கும் போது இந்தப் பிரச்சனையை தவிர்க்கலாம். அதுமட்டும் இல்லாமல் மோர் எளிதில் பசியை தணிக்கக்கூடிய உணவு.

இதில் புரதம், தாது உப்புகள், வைட்டமின், கால்சியம், மெக்னீசியம் போன்ற உடலுக்குத் தேவையான சத்துக்களும் உள்ளன. பால், தயிரை விட மோரில் கொழுப்பும் குறைவாக உள்ளது.

சளி, ஜலதோஷம் இருப்பவர்கள் இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்து குடித்தால் சளி, ஜலதோஷம் நீங்கும்.

மோரில் நிறைந்துள்ள நன்மைகளில் முக்கியமானது அசிடிட்டி பிரச்சனைக்கு நிவாரணம் தருகிறது. மோர் வயிற்று எரிச்சலை குறைத்து வயிற்றை குளிர்ச்சி அடையச் செய்து, அமில படலத்தால் ஏற்படும் வயிற்று எரிச்சலை குறைத்து உடணடி நிவாரணத்தை தரும்.

7 நாட்களில் உடல் பருமனை குறைக்க சிறந்த எளிய வழிகள்

https://bit.ly/3vLAbdC

மோர் செய்ய தேவையான பொருட்கள்

தயிர் – 1/2 டம்ளர்

குளிர்ந்த நீர் – 1 டம்ளர்

மிளகு – 2

சீரகம் – 1 டீஸ்பூன்

இஞ்சி – 1 துண்டு

கறிவேப்பிலை – 2 – 3 இலைகள்

கொத்த மல்லி – சிறிது

பச்சை மிளகாய் – 1(பொடியாகநறுக்கியது)

உப்பு – தேவையான அளவு

செய்முறை

மிக்ஸியில் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றை போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

தேவையென்றால் மிக்ஸியிலும் ஒரு சுற்று போடலாம்.

பின்பு அரைத்து வைத்த பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து கலக்கினால் குளுர்ச்சியான மோர் ரெடி!!!

இதையும் தெரிந்துக் கொள்வோம்

சிரிக்க சிரிக்க சிரிப்பு..! கொஞ்சம் ரிலாக்ஸ் ப்ளீஸ்!!!
https://bit.ly/35zJZN5

நாக்கில் வைத்தவுடன் கறையும் வாழைப்பழ அல்வா

https://bit.ly/34qisgu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *