சுவையான சத்தான நெல்லிக்காய் துவையல் இப்படி செய்து பாருங்கள்..!

சுவையான சத்தான நெல்லிக்காய் துவையல் இப்படி செய்து பாருங்கள்..!

நெல்லிக்காயில் அதிக அளவு மருத்துவ குணங்கள் உள்ளது. இது பல பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக உள்ளது. நெல்லிக்காயை துவையல் செய்து சாப்பிடும் போது பல நன்மைகள் கிடைக்கிறது. உடலுக்கு பல நன்மைகள் குடுத்து உடலை ஆரோக்கியமாக வைக்கும் நெல்லிக்காய் துவையலை எ‌வ்வாறு வீட்டிலே தயார் செய்யலாம் என்று பாரக்கலாம்.

நெல்லிக்காய் துவையல் செய்ய தேவையான பொருட்கள்:

பெரிய அளவில் நெல்லிக்காய் – 4

தேங்காய் துருவியது – கால் கப்

பெரிய வெங்காயம் – 1

இஞ்சி – சிறு துண்டு

கடுகு – கால் டீஸ்பூன்

உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்

மிளகு – அரை ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

வர மிளகாய் – 6

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

😋 முதலில் பெரிய வெங்காயம், இஞ்சி, நெல்லிக்காய் ஆகியவற்றை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

😋 ஒரு வாணலியை அடுப்பில் வைத்து கடாய் சூடு ஆனதும் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, உளுந்து, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

😋 அதனுடன் நறுக்கிய இஞ்சி மற்றும் நெல்லிக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய், தேங்காய் துருவல் மற்றும் தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி ஆற வைக்க வேண்டும்.

😋 ஆறவைத்த கலவையை நன்றாக அரைத்து எடுத்தால் சுவையான நெல்லிக்காய் துவையல் தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *