
சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி தானிய உணவுகளை அடிக்கடி உட்கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. தானிய உணவுகளில் உடலுக்கு மிகவும் நல்லது தரும் பாசிப்பருப்பு வைத்து ருசியான பாசிப்பருப்பு சொதி எவ்வாறு செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம். இந்த பாசிப்பருப்பு சொதி சர்க்கரை நோயாளிகள் மட்டும் இல்லாமல் வயதானவர்களும் சாப்பிடும் போது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது.
தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு : அரை கப்
தேங்காய் பால் : 3 கப்
பட்டை : 1 துண்டு
பெரிய வெங்காயம் : 6
தக்காளி : 4
இஞ்சி : ஒரு துண்டு ( நறுக்கியது )
பூண்டு : 10 பல் ( நறுக்கியது )
பச்சை மிளகாய் பேஸ்ட் : 5 டீஸ்பூன்
மஞ்சள் தூள் : அரை டீஸ்பூன்
எலுமிச்சம் பழம் : பாதி அளவு
கறிவேப்பிலை : தேவைக்கேற்ப்ப
கொத்த மல்லி : தேவைக்கேற்ப்ப
உப்பு : தேவையான அளவு
எண்ணெய் : தேவையான அளவு
செய்முறை :
முதலில் பாசிப்பருப்பு சுத்தமாக கழுவி அதில் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்க வேண்டு்ம்.
பிறகு வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கி, தேவையான அளவு எண்ணெய் சேர்த்து பட்டை சேர்த்து தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் பேஸ்ட், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு சேர்த்து தாளிக்கவும்.
பிறகு வேகவைத்த பாசிப்பருப்பு சேர்த்து அதனுடன் தேங்காய் பால், தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைக்க வேண்டும்.
கடைசியாக எலுமிச்சம்பழச் சாறு, கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சுவையான சொதி தயார்.
இந்த சொதி இடியாப்பத்துடன் சேர்த்து சாப்பிடும் போது சுவையாக இருக்கும்.