கிறிஸ்மஸ் ஸ்பெஷல் ஃப்ரூட்ஸ் ஜாம் கேக்

கிறிஸ்மஸ் ஸ்பெஷல் ஃப்ரூட்ஸ் ஜாம் கேக்

கிறிஸ்மஸ் அன்று அனைவரும் கேக் தயார் செய்து அதனை வெட்டி அனைவருக்கும் பகிர்ந்து கொண்டாடுவார்கள். கேக் அனைவருக்கும் பிடித்த ஒன்று. இந்த பதிவில் நாம் ஃப்ரூட் ஜாம் கேக் எவ்வாறு எளிமையாக தயார் செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மைதா – 1 கப்

கோகோ பவுடர் – 2 ஸ்பூன்

பிடித்த சீனி – 4 ஸ்பூன்

வெஜிடபிள் ஆயில் – 2 ஸ்பூன்

பேக்கிங் பவுடர் – 1 ஸ்பூன்

பால் – 1 கப்

ப்ரூட் ஜாம் – 3 ஸ்பூன்

தயார் செய்யும் முறை :

😋 முதலில் ப்ரூட் ஜாம் கேக் தயார் செய்ய மைக்ரோவேவ் பவுலில் கோக்கோ பவுடர், மைதா, சீனி, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கவும்.

😋 பிறகு அதனுடன் சிறிது சிறிதாய் பால் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்.

😋 அதன் பின் அதில் ஆயில் ஊற்றி கிளறி மைக்ரோவேவில் 1 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

😋 1 நிமிடம் வேகவைத்த பிறகு கலவையின் மேல் ப்ரூட் ஜாம் வைத்து மறுபடியும் 30 வினாடிகள் மைக்ரோவேவில் வைத்து எடுத்தால் சுவையான, சூடான ப்ரூட் ஜாம் கேக் தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *