கார்த்திகை தீபம் அணையாமல் இருக்க, அகல் விளக்கு எண்ணெய் கசியாமல் இருக்க சூப்பரான டிப்ஸ்..!

கார்த்திகை தீபம் அணையாமல் இருக்க, அகல் விளக்கு எண்ணெய் கசியாமல் இருக்க சூப்பரான டிப்ஸ்..!

இன்றைய பதிவில் நாம் கார்த்திகை தீபம் அன்று அனைவரும் வீட்டில், வாசலில் விளக்கு ஏற்றி வைப்பது வழக்கம். ஆனால் வாசலில் ஏற்றி வைக்கும் விளக்கு காற்றில் அனைந்து விடும் விளக்கில் எண்ணெய் கசியும். அப்படி எண்ணெய் கசியாமல் இருக்க அகல் விளக்கு அணையாமல் இருக்க சில முக்கிய பயனுள்ள குறிப்புகள் பற்றி இந்ந பதிவில் பார்க்கலாம்.

நீங்கள் பழைய விளக்கு ஏறறுகிறீர்கள் என்றால் ஒரு மணி நேரம் தண்ணீரில் அகல் விளக்கு ஊற வைக்க வேண்டு்ம். ஊற வைக்காமல் புது அகல் விளக்கு அப்படியே ஏற்றும் போது விளக்கில் எவ்வளவு எண்ணெய் ஊற்றினாலும் உறுஞ்சிக்கொள்ளும், விளக்கு வைக்கும் இடத்தில் எண்ணெய் கசியும். இதுவே ஊறவைத்து விளக்கு ஏற்றும் போது எண்ணெய் அதிகம் உறுஞ்சாமல் இருக்கும்.

ஒரு இரவு ஊறவைத்து விட்டு வெயிலில் காய வைக்க வேண்டாம். ஈரம் இல்லாத துணியில் துடைத்து எடுத்தால் போதும்.

நிறைய அகல் விளக்கிற்கு பொட்டு வைக்கும் போது மஞ்சள் குங்குமம் தனிதனியாக எடுத்து சிறிது நீர் ஊற்றி கலக்கி பட்ஸ் எடுத்து தொட்டு பொட்டு வைத்தால் கீழே பொட்டு விழாமல் இருக்கும், வேலையும் சீக்கிரமாக முடியும், பார்ப்பதற்கும் அழகாக இருக்கும்.

விளக்கு ஏற்றுவதற்கு 5 நிமிடம் முன்பு விளக்கில் திரி, எண்ணெய் ஊற்றி வைத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய் ஊற்றும் போது விளக்கு முழுவதும் ஊற்றக்கூடாது. விளக்கில் முக்கால் அளவு மட்டுமே ஊற்ற வேண்டும் இவ்வாறு ஊற்றும் போது எண்ணெய் கீழே வழியால் இருக்கும்.

வாசலில் ஏற்றும் விளக்கு அனையாமல் இருக்க :

ஒரு வேஸ்டான தண்ணீர் பாட்டில் எடுத்து அதை கட் செய்ய வேண்டும் இந்த படத்தில் உள்ளது போல்.

இவ்வாறு விளக்கு ஏற்றும் போது விளக்கு அனையாமல் நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *