
தமிழ் பேசும் அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்..!
இன்று நாம் கடையில் வாங்கும், ஓட்டலில் சுவைக்கும் இட்லி பொடி போல மிகவும் சுவையாக எப்படி நம் வீட்டிலே செய்யலாம் என்பதை இந்த பதிவில் பாரக்கலாம்.
இட்லி பொடி மிகவும் சுவையாக இருக்க முக்கிய காரணம் அதில் சேர்க்கும் பொருட்களும், அந்த பொருட்களை எடுக்கும் அளவும், பொருட்களை வறுபடும் தன்மையும் மிகவும் முக்கியம். இதில் எதாவது ஒன்றில் தவறு செய்தாலும் பொடி ருசியா இருக்காது.
இட்லி பொடி அரைக்க தேவையான பொருட்கள்:

கடலைப் பருப்பு = 200கிராம்
உளுந்து = 200கிராம்
எள்ளு = 120கிராம்
பெருங்காயம் = 20 கிராம்
காஷ்மீரி மிளகாய் = 60 கிராம்
பூண்டு = 20 பல்
வரமிளகாய் = 12 (காரத்திற்கேற்ப )
பொட்டுக்கடலை = 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் = 1/2 ஸ்பூன்
வரமல்லி = 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை = 3 கொத்து
உப்பு = தேவையான அளவு
செய்முறை:

கடாயை அடுப்பில் வைத்து கடலைப்பருப்பை சிவப்பு நிறம் ஆகும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக உளுத்தம்பருப்பை சிவப்பு நிறம் வரும் வரை வருத்து ஆற வைக்க வேண்டும். ( குறிப்பு: இரண்டை பருப்பையும் தனி தனியாக வறுத்து எடுத்துக்கொள்ள வைண்டும் )
அடுத்ததாக வரமிளகாயை உடையும் பக்குவத்திற்கு ( மொறுமொறு ) வறுத்து தனியாக எடுத்தக்கொள்ள வேண்டும். மிளகாய் வறுத்த பிறகு, எள் கடாயில் சேர்த்து பட படவெண்று, வெடிக்கும் வரை வறுத்து, மிளகாயோடு சேர்த்து ஆர வைக்க வேண்டும்.
அதன்பிறகு வரமல்லி பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும். சீரகம் வறுத்து பிறகு, பூண்டு வறுக்க வேண்டும். அதன் பிறகு கருவேப்பிலை வறுத்த பிறகு, உப்பு, பெருங்காயம் வறுத்து ஆற வைத்துக் கொள்ளவேண்டும்.
ஆறிய பிறகு எல்ல பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ள கூடாது.
முதலில் காய்ந்த வர மிளகாய் அரைத்துக்கொள்ள வேண்டு்ம். பிறகு கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பை அரைத்து எடுத்துக்கொள்ள வைண்டும். அதன்பிறகு எள்ளு பொட்டுகடலை ஒரு சுத்து ஓட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு பெருங்காயம், பூண்டு, சிரகம், மல்லி உப்பு இந்த பொருட்களை ஒன்றாக சேர்த்து ஒரே ஒரு சுற்று சுற்றி அதன்பிறகு அரைத்து வைத்த பொருட்களையும் ஒன்று சேர்த்து உங்களுக்கு தேவையான பதத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது அருமையான மிகவும் சுவையான இட்லி பொடி உங்கள் வீட்டிலே தயார்.
குறிப்பு:
இந்த பொருட்களை எல்லாம் வெறும் வானலில் தான் வறுக்க வேண்டும். எண்ணெய் சேர்த்து வறுக்கும் போது பொடி நீண்ட நாட்களுக்கு எடுத்து வைக்க முடியாது.
இதையும் படிக்கலாமே👇👇👇
மாதம் லட்ச கணக்கில் சம்பாதிக்க கூடிய அருமையான தொழில்
அரசு மானியத்துடன் வீட்டில் இருந்தே இந்த தொழிலை செய்தால் மாதம் 5 லட்சம் சம்பாதிக்கலாம்
30 நாட்களில் 1 லட்சம் வருமானம் தரக்கூடிய தொழில்
Channel link:
https://youtube.com/c/businessideasintamil
Short Channel:
https://youtube.com/channel/UCKsd7sf49jheixfM_VjTNqw
Telegram:
https://t.me/business_insider_tamil
Instagram: